2026 இல் பாபா வங்காவின் கணிப்பு தொடருமா? அது என்ன "Cash Crush" கணிப்பு ?
பாபா வங்காவின் கணிப்பு படி பொருளாதாம் மற்றும் முக்கிய மாற்றங்கள் பற்றி கணிக்கபட்டுள்ளது. இதை விரைவில் எதிர்பார்க்கலாம்.
2026 இல் பாபா வங்கா கணிப்பு
உலகில் பல தீர்க்கதரிசிகள் இருந்தாலும், அவர்களில் பெரும் புகழ்பெற்றவர் பாபா வங்கா. பல்கேரியாவைச் சேர்ந்த இவர், தனது அதிசயமான கணிப்புகளால் உலகளவில் பெயர் பெற்றுள்ளார்.
அந்த வகையில் அவர் பலநூறு ஆண்டுகளுக்கு முன் கணித்த விடயங்கள் தற்போது நடந்துகொண்டு வருகின்றது. அந்த வகையில் 2026 இல் பொருளாதாரம் முதல் மிகவும் முக்கியமான விடயங்கள் பலிக்கப்போகின்றது அது என்ன என்பதை பார்க்கலாம்.
2025 இல் பலித்த வியடங்கள்
இஸ்ரேல்-ஹமாஸ் போர் முதல் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் தற்போது நடந்து வரும் பதட்டங்கள், முடிவில்லாத ரஷ்யா-உக்ரைன் மோதல் வரை, இந்த ஆண்டு மனித குலத்திற்கு எதிரான பல மோசமான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
மேலும் உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகள் பேரழிவை ஏற்படுத்தும் வெள்ளம், பூகம்பங்கள் மற்றும் வெப்ப அலைகளால் பாதிக்கப்பட்டுள்ளன.
2026 தொடருமா
பாபா வாங்கா கணித்துள்ள மிகவும் ஆபத்தான கணிப்புகளில் ஒன்று 2026 ஆம் ஆண்டில் ஒரு குறிப்பிடத்தக்க உலகளாவிய பொருளாதார நெருக்கடியை அவர் கணித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஒரு நிதி பேரழிவை அவர் "Cash Crush" என்று கணித்துள்ளதாகக் கூறப்படுகிறது. 2026 ஆம் ஆண்டில், முழு உலகளாவிய நிதி அமைப்பும், பணம் முதல் டிஜிட்டல் நாணயம் என அனைத்தின் மதிப்பும் சரிந்துவிடும் என்று பாபா வாங்கா கணித்ததாக பிரிட்டிஷ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
உலகளாவிய சந்தை தொடர்ந்து நிலையற்றதாக இருப்பதால், பணவீக்கம் அதிகரித்து வருகிறது, அனைத்து விதமான கடன்களுக்கும் வட்டி விகிதங்கள் அதிகரித்து வருகின்றன, இதனால் அவரது தீர்க்கதரிசனம் மீண்டும் இப்போது கவலைக்குரியதாக இருக்கிறது.
பாபா வாங்காவின் கணிப்பு ஒருவேளை உண்மையாகிவிட்டால் என்ன செய்வது என்பது குறித்து உலகம் பல்வேறு விவாதங்களையும், உரையாடல்களையும் நடத்தத் தொடங்கியுள்ளது.
பாபா வாங்காவின் "பண நெருக்கடி" பற்றிய கணிப்பு, உலகம் ஒரு கட்டத்தில் முழு பணம் சார்ந்த அமைப்பும் சரிவை அனுபவிக்கும் என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது.
இது பெரிய வங்கிகள் திவாலாவது, பேரழிவு தரும் நாணய மதிப்பிழப்பு மற்றும் உலகளவில் கடுமையான பண பற்றாக்குறைக்கு வழிவகுக்கும். இது நடந்தால், உலகளாவிய தாக்கம் ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
பொருளாதார பிரச்சினை மட்டுமின்றி பாபா வாங்கா 2026-ல் ஒரு உலகளாவிய மோதல் ஏற்படும் என்று கணித்துள்ளார், இது மூன்றாம் உலகப் போராக இருக்கலாம் என்று பலரும் கருதுகிறார்கள்.
உலகளாவிய பதட்டங்கள் ஒரு பெரிய போருக்கு வழிவகுக்கும் என்று அவர் கணித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த காலகட்டத்தில் மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதட்டங்கள், ரஷ்யா-அமெரிக்கா மோதல் மற்றும் சீனா-தைவான் மோதல் போன்றவற்றால் அவரது கணிப்பு உண்மையாகிவிடும் என்று பலர் நம்புகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |