2026 Baba Vanga Predictions: பேரழிவு முதல் ஏலியன் வருகை வரை... பகிர் கிளப்பும் கணிப்புகள்!
2026ஆம் ஆண்டிற்கான பாபா வங்காவின் கணிப்பு தற்போது இணையத்தில் பெரும்பாலானவர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
அவரின் கணிப்புகள் இதுவரையில் 85 சதவீதம் வரையில் சரியாக நடந்துள்ளமையால் வருடம் ஆரம்பிக்கப்போகின்றது என்றால் பாபா வங்காவின் அந்த ஆண்டுக்கான கணிப்புகள் பற்றி அறிந்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் அதிகமாக இருக்கின்றது.

யார் இந்த பாபா வங்கா?
பல்கேரிய நாட்டை சேர்ந்தவர் பாபா வங்கா. 1911ஆம் ஆண்டு வடக்கு மேசிடோனியாவில் பிறந்த பாபா வங்கா சிறுவயதில் கடுமையான புயல் ஒன்றில் சிக்கி கண் பார்வையை இழந்தார்.
கண் பார்வையை இழந்த பின்பு தான் பாபா வங்காவிற்கு எதிர்காலத்தை கணித்து கூறும் சக்தி கிடைத்ததாக கூறப்படகிறது.

பாபா வங்கா, பல்கேரிய நாஸ்டர்டாமஸ் என்றும் அழைக்கப்பட்டு வருகிறார்.பல்கேரியாவின் சோபியா பகுதியில் வசித்து வந்த பாபா வங்கா கடந்த 1996 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் திகதி மரணம் அடைந்தார்.
பாபா வங்கா உலக நடப்புகள் குறித்து கணித்து கூறியவைகளில் சுமார் 85 சதவீதம் அப்படியே நடந்தேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது பாபா வங்காவின் 2026 ஆம் ஆண்டுக்கான கணிப்புகள் இணையத்தில் அசுர வேகத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது.
2026 ஆம் ஆண்டுக்கான கணிப்புகள்
பாபா வங்கா 2026-ல் மிகப் பெரிய போர் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
ஆசியா அல்லது ஐரோப்பாவில் ஆரம்பமாகும் இந்த மோதல், உலக நாடுகளின் எல்லைகளையே மாற்றியமைக்கும் அளவுக்கு மிகப்பெரும் மோதலாக உருவெடுக்கு அபாயம் இருக்கின்றாம்.

2026-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அளவில் பூமிக்கு வெளியே இருக்கும் உயிரினங்களுக்கு மனிதர்களுக்குமான தொடர்ப்பு முதல் முறையாக நிகழும் என்று கணித்துள்ளார். ஒரு பிரம்மாண்டமான விண்கலம் பூமிக்குள் நுழையவும் வாய்ப்பிருப்பதாக கணித்துள்ளார்.
2026-ல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதக் கட்டுப்பாட்டை மீறி அசுர வளர்ச்சி காணும் என்றும் பாபா வங்காவின் கணிப்பில் காணப்படுகின்றது.

மேலும் இது வேலைவாய்ப்புகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில் "ஏஐ" முடிவெடுக்கும் நிலை உருவாகும் என்றும் கணித்துள்ளார்.
இப்போதே ஓரளவுக்கு இந்த நிலை தான் நிலவுகின்றது என்பது இன்னும் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
2026 ஆம் ஆண்டில் பணவீக்கம் அதிகரித்து, பல நாடுகளின் கரன்சி மதிப்பு வீழ்ச்சியடையும். முக்கிய வங்கிகள் திவாலாகும் என்றும் பாபா வங்கா எச்சரித்துள்ளார்.

தங்கத்தின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு 2026 இல் உச்சத்தைத் தொடும் எனவும்,பூமியின் 8 சதவீத நிலப்பரப்பு கடுமையான நிலநடுக்கம், வெள்ளம், எரிமலை வெடிப்பு ஆகியவற்றால் பாதிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பாபா வாங்காவின் கணிப்புகள் குறியீடுகளாகவே இருக்கும். மேலும், அவர் எதையும் முழுமையாகவும் தெளிவாகவும் எழுதி வைக்காததால், இவை அனைத்தும் அவரைப் பின்பற்றுபவர்களால் சொல்லப்படும் தகவல்கள் மாத்திரமே என்பதும் குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |