என்ன அசிங்கம் ஆகிடும்! ரிவி நிகழ்ச்சியில் பாபா பாஸ்கர் கனி இடையே வெடித்த வாக்குவாதம்; அதிர்ச்சி ப்ரோமோ
பிரபல விஜய் தொலைக்காட்சியில் பல ரியாலிட்டி ஷோக்கள் மக்களிடையே வரவேற்பை பெற்று வருகின்றன.
அந்த வகையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்று சீசன் 2 நிறைவடைந்து கனி வெற்றிபெற்றார்.
இந்த நிலையில், அந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்தே பாபா பாஸ்கருக்கும், கனிக்கும் இடையே ஒரு ஜாலியான சண்டைகள் நடைபெறுவது வழக்கம்.
கனிக்கு கார குழம்பு என பெயர் வைத்து கலாய்த்து தள்ளுவார். இதனிடையே, குக் வித் கோமாளி பிரபலங்களான, அஷ்வின், கனி, பாபா பாஸ்கர், ஷிகிலா, வெங்கடேஷ் பட் மதுரை முத்து ஸ்டார் மியூசிக் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர்.
அப்போது, வெளியான ப்ரோமோ காட்சியில், கனி பாபா பாஸ்கரை பார்த்து ரொம்ப அசிங்கமாகிடும் போங்க என கூற, பாபா பாஸ்கர் அதற்கு பொங்கியவாறு என்ன அசிங்கம் ஆகிடும்.
வார்த்தை ரொம்ப தப்பா இருக்கு என பேசுகிறார். அதற்கு குறுக்கே மதுரை முத்து விடுங்க என சொல்ல, உடனே இருய்யா என கத்துகிறார்.
இந்த பரபரப்பான ப்ரோமோ காட்சி டிஆர்பிக்காக வெளியிட்டார்களா? இல்லை உண்மையில் சலசலப்பா என பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்...
குறிப்பிட்ட ப்ரோமோ காணொளியை இங்கே அழுத்தி பார்க்கவும்......