Excuse me.... don't follow me! கொந்தளித்த கோபியை அசிங்கப்படுத்திய பாக்கியா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கிய பழனிச்சாமியிடம் பேசிவருவதை அவதானித்த கோபி அவரை கேள்வி கேட்டு கோபப்படும் நிலையில், பாக்கியா தரமான பதிலடி கொடுத்துள்ளார்.
பாக்கியலட்சுமி சீரியல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றது. இந்த சீரியலில் மனைவிக்கு தெரியாமல் தனது காதலியுடன் பழகி வந்த கோபி அவரையே திருமணமும் செய்து கொண்டு வாழ்ந்து வருகின்றார்.
கோபியின் இந்த செயலால் ரசிகர்கள் அவரைக் கடுமையாக திட்டித் தீர்த்து வருகின்றனர். தற்போது வீட்டில் சண்டைபோட்டுக் கொண்டு கோபியுடன் வசித்து வருகின்றார் இனியா.
சீரியலில் நடிகை சுசித்ரா பாக்கியா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில், இவருக்கே மக்களின் வரவேற்பு அதிகமாக கிடைத்துள்ளது.
கோபியை எச்சரித்த பாக்கியா
இந்நிலையில் கோபி தனது வீட்டை காலி செய்யுமாறு பாக்கியாவிற்கு நெருக்கடி கொடுத்துவரும் நிலையில், 20 லட்சத்தினை கொடுப்பதற்கு பாக்கியா முழுவீச்சில் இறங்கி சமையல் ஆர்டரை வாங்கி வருகின்றார்.
ராதிகாவின் அலுவலகத்தில் உள்ள ஆர்டரையும் பாக்கியா கைப்பற்றியுள்ள நிலையில், ஆங்கிலம் தெரியாமல் அசிங்கப்படுத்தியதற்காக ஆங்கி வகுப்புக்கு சென்று வருகின்றார்.
இங்கு பழனிச்சாமி என்ற பெயரில் நடிகர் ரஞ்சித் அறிமுகமாகியுள்ளார். பாக்கியாவின் சமையல் மட்டுமின்றி அனைத்து செயல்களையும் புகழ்ந்து தள்ளும் பழனிச்சாமியுடன் பாக்கிய சூப்பர் மார்கெட் சென்றுள்ளார்.
அங்கு பழனிச்சாமியிடம் நின்று பேசுவதை கோபியின் நண்பர் புகைப்படம் எடுத்து கோபிக்கு அனுப்பிவைத்துவிட, இதனை அவதானித்த கோபி செம்ம கோபமாகியுள்ளார்.
இதனால் பாக்கியாவிடம் வந்து எச்சரிக்கை செய்த கோபிக்கு தனது பாணியில் பாக்கியா தரமான பதில் அளித்துள்ளார்.