உதவிக்கு வரும் கோபி.. பிரமித்து போன பாக்கியா- குஷியில் குடும்பத்தினர்
பாக்கியாவிற்கு உதவிச் செய்யும் கோபியை கண்டு வீட்டிலுள்ளவர்கள் அணைவரும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபியை பார்க்க போன ராதிகாவிடம் கோபி மற்றும் அவரின் குடும்பத்தினர் கோபமாக பேசி அனுப்பி விடுகிறார்கள்.
அதே சமயம், செழியன் நடந்து கொள்ளும் விதத்தை பார்த்து ஜெனி கேள்வி கேட்கிறார். ஆரம்பத்தில் கோபியை பார்ப்பதற்காக பாக்கியா மருத்துவமனைக்கு வரவில்லை.
இது குறித்து ஈஸ்வரி கேட்ட போது பாக்கியா, “ அவரின் உயிருக்கு ஆபத்து என்றதும் நான் தான் மருத்துவமனையில் சேர்த்தேன். அத்துடன் என்னுடைய கடமை முடிந்துவிட்டது, இனி அவரை நான் வந்து பார்க்க மாட்டேன்..” என முகத்திற்கு முகம் கூறி விடுகிறார்.
பின்னர் மருத்துவமனைக்கு அனைவரும் கோபியை அழைக்க சென்ற போது ராதிகாவுடன் செல்ல மாட்டேன், அம்மாவுடன் வீடுக்கு செல்வேன்.. என அடம்பிடித்து பாக்கியாவுடன் பாக்கியா வீட்டிற்கு வந்து விடுகிறார்.
இதனை தொடர்ந்து, ஈஸ்வரி கோபியும் அமர்ந்து பாக்கியாவின் பெறுமைகளை பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது பாக்கியா காலையில் எழுந்தது முதல் செய்யும் வேலைகள் குறித்து வீட்டிலுள்ளவர்கள் பெறுமையாக பேசுகிறார்கள்.
பாக்கியாவிற்கு உதவிச் செய்யும் கோபி
இந்த நிலையில், கேன்டீனில் புதிய வகையான ஓடர்கள் வருகின்றது. இதனை எப்படி சமாளிக்கலாம் என பாக்கியா ஜெனி- செழியனிடம் ஐடியா கேட்கிறார்.
இதனை வெளியில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த கோபி உள்ளே வந்து, “ புதிய வகையான ஓடர்கள் வரும் பொழுது அதனை கற்றுக் கொண்டு சமைப்பது கடினமான விடயம். ஆகையால் புதிய வகையான உணவுகள் சமைக்க வரும் பொழுது அதற்கான சமையல்க்காரர்களை வெளியில் இருந்து எடுத்து சமைக்கலாம்...” என கூறுகிறார்.
கோபி கூறுவதை கேட்டு பாக்கியா உட்பட வீட்டில் உள்ள அனைவரும் பிரமித்து போகிறார்கள்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |