இனியாவுக்கு திருமணம்.. எந்த கவலையும் இல்லாமல் அம்மாவுடன் குத்தாட்டம் போட்ட காதலன்
பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் செல்வியும் அவருடைய மகனும் குத்தாட்டம் போட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் 1000 எபிசோட்களை கடந்து, 5 வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியலில் கணவர் இல்லாமல் பெண்ணொருவர் அவருடைய வாழ்க்கையில் எப்படி சாதிக்கிறார் என்பதனை கருவாகக் கொண்டு தான் கதைக்களம் நகர்த்தப்படுகிறது.
கோபியை பாக்கியாவை விட்டு இரண்டாவதாக ராதிகாவை திருமணம் செய்துக் கொண்டார். ஆனால் அந்த திருமண வாழ்க்கை நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை, மாறாக தற்போது இருவரும் விவாகரத்து வாங்கி பிரிந்து விட்டனர்.
அதன் பின்னர், பாக்கியா வீட்டில் இருந்த கோபிக்கு இனியா, செல்வியின் மகனை காதலிக்கும் விடயத்தை கண்டுபிடிக்கிறார். எப்படியாவது இருவரையும் பிரித்து விட வேண்டும் என நினைத்த கோபி வீட்டிலுள்ளவர்களிடம் கூறி, “படிக்கும் காலத்தில் காதல் வேண்டாம்” என இருவரையும் பிரிக்கிறார்.
கவலை மறந்து காதலன் போட்ட குத்தாட்டம்
இந்த நிலையில், இனியா வேலைக்குச் சென்றதும் கோபி, பாக்கியாவின் ஹோட்டலுக்காக ஆசைப்பட்டு பெண் கேட்டு வந்த சுதாகர் மகனுக்கு இனியாவை திருமணம் செய்து வைத்து விடுகிறார்.
ஆனால் அவர்கள் வியாபார நோக்கத்திற்காக மாத்திரமே இனியாவை திருமணம் செய்துக் கொண்டார்கள் என புரியாமல் ஆட்டம் போட்ட ஈஸ்வரியும் கோபியும் அடுத்து என்ன செய்வது என தெரியாமல் இது குறித்து சுதாகரிடமே பேச விடலாம் என கோபி செல்கிறார்.
இவ்வளவு பிரச்சினைகள் வெடித்துக் கொண்டிருக்கும் பொழுது செல்வியும் அவருடைய மகனும் கனிமா பாடலுக்கு நடனம் ஆடிய காணொளியை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.
காணொளியை பார்த்த சின்னத்திரை ரசிகர்கள், “எந்த கவலையும் இல்லாமல் குத்தாட்டமா?” எனக் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |