மகளை திருமணம் செய்து கொடுத்து விட்டு ராதிகாவுடன் கூட்டு சேர்ந்த பாக்கியா- மீண்டும் வருவாரா?
பாக்கியலட்சுமி பாக்கியா மற்றும் ராதிகா சீரியலில் எதிரிகளாக நடித்தாலும் ரியல் வாழ்க்கையில் சிறந்த நண்பர்களாக பழகி வருகிறார்கள். இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் கடந்த 5 வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியல், திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
அதில், நடிகை சுசித்ரா பாக்கியலட்சுமி என்ற லீட் ரோலில் நடித்து வருகிறார். அவருடன் இணைந்து வேலு லட்சுமணன், சதிஷ், நேகா மேனன், ரேஷ்மா பசுபுலேட்டி ஆகியோர் நடித்து வந்தனர்.
.இனியாவின் அதிரடி
இந்த நிலையில் ராதிகாவை பிரிந்து அம்மா மற்றும் பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த கோபி இனியா விடயத்தில் கொஞ்சம் கடுமையாக நடந்து கொண்டார்.
அம்மா- அப்பாவின் நிலையை புரிந்து கொண்ட இனியா அவருடைய காதலை தியாகம் செய்து விட்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் பாக்கியாவின் ஹோட்டலை சுதாகர் கைப்பற்றி விட்டார்.
ராதிகாவுடன் கைக்கோர்க்கும் பாக்கியா
இந்த கதை இன்னும் சில எபிசோட்களில் பாக்கியலட்சுமி சீரியல் முடிவுக்கு வரவிருக்கிறது. கோபியுடன் என்ன நடந்தாலும் சேர மாட்டேன் என பாக்கியாவும் ஒரு முடிவுடன் இருக்கிறார்.
இப்படியொரு சமயத்தில் பாக்கியா, ராதிகாவுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருக்கும் காணொளியை அவருடைய சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். அதில், சீரியலால் கிடைத்த சொந்தம் என்றும் ராதிகா குறிப்பிட்டுள்ளார்.
காணொளியை பார்த்த சின்னத்திரை ரசிகர்கள், “மீண்டும் ராதிகா சீரியலில் நடிப்பாரா?..” எனக் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |