பென்ஸ் கார் வாங்கி நிஜ வாழ்க்கையிலும் மாஸ் காட்டிய பாக்கியா; வைரலாகும் புகைப்படம்
பென்ஸ் கார் வாங்கி நிஜ வாழ்க்கையிலும் மாஸ் காட்டிய பாக்கியாவின் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகை சுசித்ரா
பிரபல தனியார் தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் தினமும் ‘பாக்கியலட்சுமி’ என்ற தொடர் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்தத் தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. டிஆர்பி ரேட்டிங்கிலும் முதலிடத்தில் உள்ளது.
இந்தச் சீரியலில் பாக்கியாவாக நடிப்பவர் தான் சுசித்ரா. இவருடைய எளிமையான நடிப்பு மக்கள் அனைவருக்கும் பிடித்துள்ளது. பாக்கியலட்சுமி சீரியலில், கணவன் கைவிட்ட நிலையிலும், பாக்யா தன் சொந்தக்காலில் நின்று போராடி ஜெயிப்பதைத்தான் இந்த தொடர் மூலக்கதையாக கொண்டு இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் நிஜ வாழ்க்கையிலும் சுசித்ரா பாக்யாவாகவே வாழ்ந்து காட்டியுள்ளார்.
வைரலாகும் புகைப்படம்
இந்நிலையில், தனது இன்ஸ்டா பக்கத்தில் சுசித்ரா ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் லேட்டஸ்ட் மாடல் கருப்பு நிற பென்ஸ் காரில் நின்றபடி போஸ் கொடுத்துள்ளார்.
மேலும், “உங்களுடன் கைகோர்க்கும் தருணத்தை பற்றி கவலைப்பட வேண்டாம். நீங்கள் இறைவனின் கையை தொட்டால் போதும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இது தொடர்பான புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தைப் பார்த்த அவரது ரசிகர்கள் சீரியல் போலவே சொந்த வாழ்க்கையிலும் சாதித்துள்ளீர்களே என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |