பாக்கியலட்சுமி சீரியல் நடிகரா இவர்? இப்படி ஆகிட்டாரே.. தீயாய் பரவும் வைரல் புகைப்படம்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் சீரியல் பாக்கியலட்சுமி. விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த தொடருக்கு தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இத்தொடரில் கோபிநாத் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் சதீஷ். இத்தொடரில் இவர் அதிகம் பேசாத அமைதியான குணத்தை கொண்டு ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.
மேலும், இவர் பல சீரியல்களில் பல்வேறு கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர். இந்த நிலையில், அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புது கெட்டப்பில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படம் ராமானுஜன் என்ற புதிய படத்தில் அவர் கணித மேதை ராமானுஜனுக்கு நண்பனாக அனந்தராம ஐயங்கார் என்ற கதாபாத்திரத்தில், இந்த கெட்டப்பில் நடிக்கிறேன் என்று கூறியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.