கோபிக்காக வெடித்த சண்டை.. தாலிக்காக போராடும் ராதிகா- பாசப்போராட்டத்தில் கதைக்களம்
பாக்கியா வீட்டிற்கு கோபியை அழைத்து செல்லும் முடிவில் ஈஸ்வரி ராதிகாவிடம் சண்டைப்போட்டுக் கொண்டிருக்கிறார்.
பாக்கியலட்சுமி சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் 1000 எபிசோட்களை கடந்து ஓடி கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. குடும்ப பெண்ணின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த சீரியல் பெண்கள் மத்தியில் மிகவும் வரவேற்பை பெற்று வருகிறது.
அந்த வகையில் தற்போது இனியாவின் புலம்பலையும், ராதிகாவின் வெறுப்பையும் பெற்ற கோபிநாத் மனமுடைந்து காரில் சென்று கொண்டிருந்த போது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. வலி தாங்கமுடியாமல் ராதிகாவிற்கு அவரது அம்மாவிற்கும் தொடர்ந்து கோல் செய்து கொண்டிருக்கிறார்.
ஆனால் இவர்கள் இருவரும் கோலை எடுக்காமல் கோபியின் கோலை உதாசினப்படுத்துகிறார். இதனால் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக பாக்கியலட்சுமிக்கு போன் செய்கிறார். சம்பவ இடத்திற்கு விரைந்த பாக்கியா உடனே கோபிநாத்தை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்கிறார்.
பாக்கியாவின் இந்த குணம் கோபி உட்பட ரசிகர்கள் மனதிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எல்லாம் முன்னர் பின்னர் கோபியை தேடிக் கொண்டிருந்த ராதிகாவிற்கு பாக்கியா கோல் செய்து நடந்தவற்றை கூறுகிறார்.
ஈஸ்வரியுடன் செல்வாரா?
இந்த நிலையில், கோபிநாத்திற்கு பைபாஸ் சர்ஜரி செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியதும், உதவிக்காக பாக்கியா தான் மனைவியாக இருந்து கோபிநாத்திற்கு அத்தனை வேலைகளையும் செய்கிறார்.
தற்போது சிகிச்சை முடிந்து ஓய்வில் இருக்கும் கோபியிடம் ராதிகா மன்னிப்பு கேட்டு தன்னுடன் அழைக்கிறார். இது ஒரு புறம் இருக்கையில் ஈஸ்வரியும் தன்னுடன் வரும்படி அழைக்கிறார்.
மனைவி, அம்மா பாசப்போராட்டத்தில் சிக்கிய கோபி என்ன முடிவு எடுப்பார் என்பதனை இனிவரும் எபிசோட்களில் பார்க்கலாம். இப்படியாக இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |