மறந்துருடா.. ராதிகா இல்லாமல் தவிக்கும் கோபிக்கு ஈஸ்வரி கொடுக்கும் அட்வைஸ்- ஏற்பாரா?
பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவை பிரிந்து வாழ முடியாமல் கோபி தவித்து கொண்டிருக்கிறார். அதற்கு ஈஸ்வரி கொடுக்கும் அட்வைஸ் ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் கடந்த 5 வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியல், திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
அதில், நடிகை சுசித்ரா பாக்கியலட்சுமி என்ற லீட் ரோலில் நடித்து வருகிறார். அவருடன் இணைந்து வேலு லட்சுமணன், சதிஷ், நேகா மேனன், ரேஷ்மா பசுபுலேட்டி ஆகியோர் நடித்து வருகின்றனர்.
இந்த தொடரில் ரேஷ்மா கோபியின் இரண்டாவது மனைவியாக ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கோபியை இரண்டாவதாக திருமணம் செய்த ராதிகா அவரை திருமணம் செய்த காலம் முதல் பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறார். அவருக்கும் சீரியலில் மயூ என்ற பெண்பிள்ளையொருவர் இருக்கிறார்.
கோபியை பிரியும் ராதிகா
இந்த நிலையில், கோபிக்காக தனது சொந்த விருப்பு வெறுப்புக்களை விட்டுக் கொடுத்து வாழும் ராதிகா, அவர் வாழ்க்கையில் ஒரு முக்கியமான முடிவு எடுத்துள்ளார்.
அதாவது, பாக்கியா வீட்டில் 10 நாட்களுக்கு இருப்பதற்கு மாத்திரமே கோபி வாடகை கொடுத்தார். அதனால் ராதிகாவும் அவருடைய மகள் மயூவுடன் வந்து கோபியுடன் பாக்கியா வீட்டில் இருந்தார்கள். இருந்தாலும், அவருக்கு நாளுக்கு நாள் கஷ்டங்கள் அதிகரித்து கொண்டே போனது. ஈஸ்வரியும் இனியாவும் பல சந்தர்ப்பங்களில் ராதிகாவை அசிங்கப்படுத்தினார்கள்.
அனைத்தையும் கோபிக்காக பொறுத்து கொண்ட ராதிகா ஒருக்கட்டத்தில் பாக்கியா வீட்டில் நடந்த அவமானத்தை பொறுத்துக் கொள்ள முடியாமல் கோபியை பிரிந்து வாழ முடிவு செய்து விட்டார். இதனால் கோபியை அவர் வீட்டில் விட்டு விட்டு மயூவுடன் அவருடைய வீட்டிற்கு வந்துள்ளார்.
ராதிகா- மயூ பிரிவை தாங்க முடியாத கோபி, ராதிகாவை தேடி வருகிறார். அப்போது ராதிகா பாரபட்சம் பார்க்காமல் திட்டி விடுகிறார். இதனால் மன முடைந்து போன கோபி என்ன பேசுவது என்று தெரியாமல் சோகமாக வீட்டிற்கு செல்கிறார்.
ராதிகாவின் பிரிவை ஏற்க முடியாத கோபி என்ன செய்வது என தெரியாமல் அமர்ந்திருக்கிறார். அவரிடம் ஈஸ்வரி,“ ராதிகா ஓ வாழ்க்கையில் வரவில்லை என நினைத்து கொள், எல்லாம் மறந்து விடு, இனி புது வாழ்க்கை வாழலாம். உன்னை வேண்டாம் என தூக்கி வீசியவள் உனக்கு வேண்டாம்..” என கூறுகிறார். ஈஸ்வரி இப்படி கூறியதை கேட்டவுடன் கோபிக்கு கவலை பொறுக்க முடியவில்லை.
ராதிகா இல்லாமல் பாக்கியா வீட்டில் கோபி எப்படி வாழப்போகிறார் என்பதனை தொடர்ந்து வரும் எபிசோட்களில் பார்க்கலாம். இப்படியாக இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |