சினிமாவுக்குள் என்றி கொடுக்கும் மோனாலிசா- கும்பமேளாவில் அடித்த ஜாக்போட்
இயக்குநர் சனோஜ் மிஸ்ரா, கும்பமேளாவில் வைரலான பெண் மோனாலிசாவை நாயகியாக வைத்து படம் இயக்கவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
மோனாலிசா
உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் ருத்ராட்ச மாலை வியாபாரம் செய்து வந்தவர் தான் மத்திய பிரதேசத்தின் இந்தூரைச் சேர்ந்த 16 வயதான இளம் பெண் மோனாலிசா.
இவரது தோற்றம் காண்போரை கவர்ந்த மோனாலிசா போஸ்லே எனும் சிறுமி பொதுமக்களின் தொந்தரவு மற்றும் செல்ஃபி வெறியர்களால் கும்பமேளாவில் இருந்து கிளம்பி தனது சொந்த ஊருக்கு சென்று விட்டார்.
சமூக வலைதளங்களில் இவருக்கு தனி ரசிகர் பட்டாளம் உருவாகிவிட்டது.
இதனை தொடர்ந்து மோனாலிசா பல படங்களில் நடிக்கவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து போலியான செய்திகள் வெளியாகி வந்தன.
சினிமா வருகை
இந்த நிலையில், கும்பமேளாவில் வைரலான மோனாலிசாவின் வீட்டுக்கு நேரில் சென்று குடும்பத்தாருடன் பேசி அவரை படத்தில் நடிக்க வைக்க ஒப்புதல் வாங்கியுள்ளதாக பிரபல இயக்குநர் சனோஜ் மிஸ்ரா புகைப்படத்துடன் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
பிரபல இயக்குநர் சனோஜ் மிஸ்ரா இயக்கப்போகும் “டைரி ஆஃப் மணிப்பூர்” படத்தில் மோனாலிசாவை நடிக்க வைக்கப்போவதாக இயக்குநர் அறிவித்துள்ளார்.
மேலும், மோனாலிசாவின் வீட்டுக்குச் சென்று அவரை சினிமாவில் நடிக்க வைக்க பெற்றோர்களிடம் ஒப்புதல் வாங்கியுள்ளாராம்.
இந்தப் படத்தில் ராஜ்குமார் ராவின் சகோதரர் அமித் ராவ் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மோனாலிசா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |