மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர்
பாக்கியா- கோபி சேர வேண்டும் என ஆசைப்பட்ட ஈஸ்வரிக்கு தரமான பதிலடி கிடைத்துள்ளது.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் கடந்த 5 வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியல், திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
அதில், நடிகை சுசித்ரா பாக்கியலட்சுமி என்ற லீட் ரோலில் நடித்து வருகிறார். அவருடன் இணைந்து வேலு லட்சுமணன், சதிஷ், நேகா மேனன், ரேஷ்மா பசுபுலேட்டி ஆகியோர் நடித்து வருகின்றனர்.
கோபி, பாக்கியாவை விவாகரத்து செய்து விட்டு அவரின் முன்னாள் காதலியான ராதிகாவை மறுமணம் செய்து கொண்டார். அப்போது ராதிகாவிற்கு மயூ என்ற பெண் குழந்தையும் இருந்தது. ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை. ராதிகா - கோபியுடன் வாழ முடியாது என விவாகரத்து கொடுத்து விட்டார்.
தற்போது பாக்கியா வீட்டில் ஈஸ்வரி தயவில் கோபி இருந்து வருகிறார். அவர் இல்லாத காலத்தில் கோபி எங்கு செல்வார் என பயந்த ஈஸ்வரி, கோபி- பாக்கியா இருவரையும் எப்படியாவது சேர்த்து வைத்து விடலாம் என திட்டம் போடுகிறார்.
மறுமணத்தை மறுத்த பாக்கியா
இந்த நிலையில், பாக்கியாவின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நடக்கின்றன. அந்த சமயத்தை பயன்படுத்திய ஈஸ்வரி, அனைவரும் பார்க்க மைக்கில், பாக்கியாவும் கோபியும் மீண்டும் இணைந்து கணவன்- மனைவியாக இருப்பார்கள் எனக் கூறி விடுகிறார்.
ஈஸ்வரி இப்படியொரு வேலை செய்வார் என எதிர்பார்க்காத பாக்கியா, அதே நிகழ்வில், “முடிந்தது முடிந்தாகவே இருக்கட்டும். எனக்கு இதில் துளியளவும் விருப்பம் இல்லை..”எனக் கூறி விடுகிறார். பாக்கியாவின் பதில் கேட்டு ஈஸ்வரி கோபத்தில் அங்கிருந்து வெளியேறி விட்டார்.
வீட்டிற்கு வந்ததும் கோபி பாக்கியாவிடம்,“ நீ எதுவாக இருந்தாலும் அங்கு கூறாமல் வீட்டிற்கு வந்ததும் கூறியிருக்கலாம்..” என்கிறார். ஆனாலும் தன்னுடைய மாமியார் அப்படி பேசியதை பாக்கியாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |