காய்கறி வாங்க தெரியாமல் அவஸ்தைப்படும் கீர்த்தி- அவரே கலாய்த்து கொண்ட தருணம்
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் காய்கறி வாங்க தெரியாமல் அவஸ்தைப்படும் கீர்த்தி சுரேஷின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகை கீர்த்தி சுரேஷ்
தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக இருக்கும் வாரிசு நடிகர்களில் ஒருவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.
இவர் நடித்த முதல் படமே ரசிகர்கள் மத்தியில் கீர்த்தி சுரேஷிற்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.
இதனை தொடர்ந்து விஜய், சூர்யா, விஷால் என கோலிவுட் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர ஆரம்பித்து விட்டார். தற்போது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, தமிழ் பல மொழிப்படங்களில் நடித்து வருகிறார்.
தேசிய விருது வாங்கிய நடிகைகளில் ஒருவராக இருக்கும் கீர்த்தி சுரேஷ், தனக்குள் இருக்கும் மொத்த காதலையும் சினிமாவில் காட்டி நடித்து வருகிறார்.
சின்னத்திரை என்றி கொடுக்கும் கீர்த்தி
இந்த நிலையில், இவர் நடிப்பில் கடைசியாக பேபி ஜான் திரைப்படம் வெளியாகி வெற்றி நடைப்போட்டது.
இதனை தொடர்ந்து Startup Singam என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையிலும் கால்பதித்திருக்கிறார். அந்த நிகழ்ச்சியில், காய்கறிகளை எப்படி பார்த்து வாங்குவது மேம்? எனக் கேட்டதற்கு அவருக்கு தெரியும் என எழும்பி வருகிறார். ஆனால் அவருக்கு சரியாக தெரியவில்லை.
அப்போது அங்கிருந்த போட்டியாளர்களும் தொகுப்பாளர் ஏஞ்சலும் சேர்ந்து காய்கறிகளை எப்படி கடைகளில் பார்த்து வாங்குவது என சொல்லிக் கொடுக்கிறார்கள்.
இப்படியாக இன்றைய எபிசோட்டுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |