இந்த நேரத்தில் இது தேவையா.. சந்தடி சாக்கில் கொளுத்து போட்ட கோபி- இனி நடக்க போவது என்ன?
பாக்கியலட்சுமி சீரியல் கோபி சந்தடி சாக்கில் மகன்களிடம் கொளுத்தி போட ஆரம்பித்துள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் 1000 எபிசோடை கடந்து ஓடி கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியலில் நடிக்கும் கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவிட்டதால் இன்று வரை சுவாரஸ்யமாக சென்றுக் கொண்டிருக்கின்றது.
அந்த வகையில், ஜெனி இரண்டாவது தடவையாக கர்ப்பமாக இருக்கிறார். இந்த செய்தி அறிந்த ஈஸ்வரி அமிர்தாவையும் எழிலுக்காக குழந்தை பெற்றுக் கொள்ளுமாறு கடுமையாக சொல்கிறார்.
இதனை தொடர்ந்து அமிர்தா எழிலிடம் சென்று பாட்டி பேசியதை பற்றி கூறுகிறார். இதனால் எழிலுக்கு கோபம் வந்து நியாயம் கேட்க வருகிறார்.
மகன்கள் பக்கம் சாய்ந்த கோபி
இந்த நிலையில் பாட்டியுடன் வாக்குவாதம் ஒரு கட்டத்திற்கு மேல் முற்றியுள்ளது. எழிலை ஈஸ்வரி திட்டுவதை ஏற்றுக் கொள்ள முடியாத பாக்கியா, வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறுகிறார்.
எழில் வெளியே போனது தெரிந்த கோபி, உடனே அவர்களை பார்ப்பதற்கு ஹோட்டலுக்கு செல்கிறார். அங்கு சென்று பாக்கியாவை இறக்கி பேசுகிறார். ஆனால் எழில் எந்த இடத்திலும் தன்னுடைய அம்மாவை இறக்காமல் பிடிக் கொடுத்து பேசுகிறார்.
பின்னர் செழியன் இரண்டாவது குழந்தைக்கு தந்தையானது தெரிந்து கொண்ட கோபி அவரை கட்டியணைத்து சந்தோசம் தெரிவிக்கிறார். இதனால் செழியனுக்கு அப்பா மீது பாசம் வந்தது போல் காட்டப்படுகிறது.
இப்படியாக நேற்றைய தினம் எபிசோட் முடிந்துள்ளது. இனி வரும் நாட்களில் எப்படி அமையப் போகிறது என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.