சாணக்கிய நீதி: இந்த குணம் உள்ள பெண்களை தவறியும் திருமணம் செய்யாதீங்க- ஆண்களே ஜாக்கிரதை
பண்டைய காலத்தில் இந்தியாவின் சிறந்த ஆசிரியர், தத்துவஞானி மற்றும் அரச ஆலோசகர் என பன்முக கொண்டு சிறந்து விளங்கியவர் தான் சாணக்கியர்.
இவர் “கௌடில்யர்” என்ற பெயராலும் அழைக்கப்பட்டார்.
சாணக்கியர் வாழ்ந்த காலப்பகுதியில் வாழ்க்கை, வெற்றி பற்றிய மதிப்புமிக்க பல கொள்கைகள் உருவாக்கியிருக்கிறார்.
இவைகளையே அறிவுரைகளாக தொகுத்து இன்று மக்கள் சாணக்கிய நீதி என படித்து கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில், சிறந்த திருமண வாழ்க்கைக்கு சில வகை பெண்களிடமிருந்து விலகி இருப்பது சிறந்தது என சாணக்கியர் கூறுகிறார்.
சாணக்கியர் நீதியின் படி, பெண்கள் அழகாக இருந்தாலும் அவர்களின் அழகை கெடுக்கும் ஒரு சில தீய குணங்களை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
சாணக்கியரின் தத்துவங்கள்
1. பொதுவாக, ஆண்கள் தனக்கு வரும் துணை அழகாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள். ஆனால் அவர்கள் அறிவாகவும் இருக்க வேண்டும் என சாணக்கியர் கூறுகிறார். அத்தகைய பெண்களை திருமணம் செய்தால் அது உங்கள் வாழ்க்கைக்கும் பிரச்சினையாக வரலாம்.
2. பெண்ணின் குடும்ப வரலாறு எப்படி இருக்கிறது என்பதனை பரிசோதிக்க வேண்டும். பெண்கள் எவ்வளவு அழகாக இருந்தாலும் அவர்களின் குடும்பம் மோசமாக இருந்தால் அது உங்கள் குடும்பத்தையும் பாதிக்கலாம். நீங்கள் நல்ல மரியாதையுடைய குடும்பத்தினர் என்றால் இது போன்ற பெண்களை திருமணம் செய்தால் உங்கள் வீட்டின் நிம்மதி கெட்டு விடும்.
3. சில சமயங்களில் அழகாக இருக்கும் பெண்கள் முரட்டுத்தனமாக நடந்து கொள்வார்கள். இவர்களை ஒருபோதும் திருமணம் செய்ய வேண்டாம் என சாணக்கியர் கூறுகிறார். அத்தகைய பெண் துணையாக வந்தால் கணவனை கட்டாயப்படுத்தி நினைத்த காரியங்களை செய்வார்கள்.
4. சாணக்கிய நீதியில் பொய் சொல்லும் பெண்களையும், உண்மையை மறைத்து வாழும் பெண்களையும் மணக்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. பொய் சொல்லும் பெண்கள் சில சமயங்களில் கணவருக்கு எதிராகவும் பேசலாம். அத்தகைய பெண்கள் குடும்பத்தை உடைக்கவும் முன்வருவார்கள்.
5. சாணக்கியரின் கூற்றுப்படி வீட்டு வேலை தெரியாத பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என கூறப்படுகிறது. இவர்கள் கணவரின் மீது சுமைகளை சுமத்தி விடுவார்கள். எவ்வளவு பெரிய பெண்களாக இருந்தாலும் வீட்டில் ஒரளவு சரி வேலை செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |