கோபியை பாக்கியாவுடன் சேர்க்க போராடும் ஈஸ்வரி.. மனமாற்றத்தை அறியும் ராதிகா- சேர்வார்களா?
கோபியை பாக்கியாவுடன் சேர்த்து வைக்க ஈஸ்வரி ஒருபக்கம் போராடி வருகிறார்.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் 1000 எபிசோட்களை கடந்து 5 வருடத்திற்கு மேலாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியலில், கணவனை பிரிந்த பெண், எப்படி தன்னுடைய வாழ்க்கையில் அடுத்தக்கட்டத்திற்கு நகர்கிறார் என்பதனை கருவாக கொண்டு ஒளிபரப்படுகின்றது.
அந்த வகையில், வீட்டில் ஈஸ்வரி, இனியா, செழியன் மூன்று பேரும் இணைந்து கோபியை மீண்டும் பாக்கியாவோடு சேர்த்து வாழ வைக்க வேண்டும் என பேசிக் கொண்டிருக்கிறார்கள். கோபிக்கு பாக்கியாவிடம் பேசும்போது தனி சந்தோஷம் கிடைக்கிறது.
“பாக்கியாவும் கோபியோடு சேர்ந்து இருந்தால் சந்தோஷமா இருப்பா அதனால நாம சீக்கிரமா இந்த ராதிகாவை வீட்டை விட்டு வெளியே அனுப்பனும்” என்று பிளான் போடுகிறார்கள்.
அதற்கு செழியன்,“அது எப்படி முடியும்” என்று கேட்க, உன் வாழ்க்கையில் என்ன நடந்தது? மாலினி இடையில் வந்தால் தானே. அதற்கு பிறகு நீ ஜெனி காலில் இனி விழுந்து அவளோடு மீண்டும் சேர்ந்து வாழலையா? என்று கேட்கிறார்.
கணவரின் மனம் மாற்றத்தை அறியும் ராதிகா
இந்த நிலையில், பாக்கியாவின் கேன்டீனுக்கு சமைப்பதற்காக ஆட்களுடன் கோபி வந்து உதவிச் செய்து கொடுக்கிறார். உணவையும் கூட பாக்கியாவுடன் இருந்து சுவைத்து பார்த்து கோபி பதில் கொடுக்கிறார்.
இவற்றை பார்த்த எழில்- அமிர்தாவிற்கு ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும் பாக்கியாவின் நிலையை பார்த்து பாவப்படுகிறார்கள். ராதிகா தன்னுடைய கணவரை யாருக்காகவும் விட்டுக் கொடுக்கக் கூடாது என பிடிவாதமாக இருக்கிறார். ஆனால் ஈஸ்வரி தினம் தினம் ராதிகாவுடன் சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறார்.
கோபியின் மனம் மாற்றத்தை பார்த்து ராதிகாவுடன் சந்தேகிக்கிறார். ஆனால் அவரால் எதையும் முடிவாக கூற முடியவில்லை. இப்படி வீட்டில் ஏகப்பட்ட குழப்பங்களுடன் எபிசோட்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில், ராதிகா, கோபியின் மாற்றத்தை பார்த்து அச்சம் கொள்வது போன்று தெரியவருகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |