நடிகர் சைஃப் அலிகானை கத்தியால் தாக்கிய நபர் கைது.. தீவிர சிகிச்சையில் பிரபலம்- நடந்தது என்ன?
நடிகர் சைஃப் அலிகானை கத்தியால் குத்திய வழக்கில் தப்பி சென்ற நபர் இன்று அதிகாலை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.
நடிகர் சைஃப் அலிகான்
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் சைஃப் அலிகான்.
இவர், மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பாந்த்ரா பகுதியில் பல பிரபலங்கள் வசித்து வருகின்றனர்.
இங்குள்ள “சத்குரு சரண்”என்ற பெயரில் உள்ள 12 மாடிகள் கொண்ட குடியிருப்பில் நடிகர் சைஃப் அலிகான் 4வது மாடியில் வசித்து வருகிறார்.
எப்போது சம்பவம் நடந்தது?
இந்த நிலையில் கடந்த 16ம் தேதி அதிகாலையில் நடிகர் சைஃப் அலிகான் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
குறித்த சந்தேக நபர், சைஃப் அலிகான் வீட்டில் கொள்ளையடிக்க உள்ளே வந்திருக்கிறார். அந்த சமயம் சைஃப் அலிகான் நபரை பிடிக்க முயற்சி செய்திருக்கிறார்.
அப்போது குறித்த நபர் கத்தியால் குத்திவிட்டு ஓடி மறைந்துள்ளார். மர்ம நபர் அவரை மொத்தம் 6 முறை கத்தியால் குத்தியிருக்கிறார். அதிலும் குறிப்பாக முதுகு பகுதியில் சைஃப் அலிகானுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளதோடு பாதி கத்தி உடைந்து அவரது உடலில் இருந்துள்ளது.
தாக்கிய நபர் கைது
இதனை தொடர்ந்து சைஃப் அலிகான் லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கை, கழுத்தில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. முதுகில் குத்தியபடி இருந்த கத்தி அகற்றப்பட்டது. தற்போது அவர் மெல்ல உடல்நலம் தேறி வருவதாக மருத்துவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
பொலிஸார் நடத்திய தீவிர விசாரணையில், நடிகர் சைஃப் அலிகான் வழக்கில் தொடர்புடைய ஒருவரை நேற்று சத்தீஸ்கர் துர்க் ரயில் நிலையத்தில் கைது செய்துள்ளனர். மும்பை எல்டிடி பகுதியில் இருந்து கொல்கத்தா சாலிமர் செல்லும் ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தபோது அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து நடிகரை கத்தியால் தாக்கிய நபரை இன்று அதிகாலை பொலிஸார் கைது செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |