பாக்கியாவிற்கு சம்பந்தியாகும் செல்வி- அடுத்தக்கட்டத்திற்கு சென்ற காதல்.. ஈஸ்வரி ஏற்றுக் கொள்வாரா?
இனியாவின் காதலை பாக்கியா மற்றும் ஈஸ்வரி இருவரும் ஏற்றுக் கொள்வார்களா? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் கடந்த 5 வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியல், திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
அதில், நடிகை சுசித்ரா பாக்கியலட்சுமி என்ற லீட் ரோலில் நடித்து வருகிறார். அவருடன் இணைந்து வேலு லட்சுமணன், சதிஷ், நேகா மேனன், ரேஷ்மா பசுபுலேட்டி ஆகியோர் நடித்து வருகின்றனர்.
அந்த வகையில், ஈஸ்வரி, பாக்யா மற்றும் வீட்டிலுள்ள அனைவரும் எழிலின் திரைப்பட விழாவிற்கு செல்கிறார்கள். அப்போது கோபியிடம் இருந்து விவாகரத்து பெற்ற ராதிகாவும் அந்த நிகழ்வில் கலந்து கொள்கிறார்.
இது குறித்து பாக்கியாவிடம் ஈஸ்வரி கேட்ட போது, “இது என் மகன் நிகழ்வு, அவன் முன்னேற்றத்தை பார்ப்பதற்காக அழைத்தேன். வேறு எந்த நோக்கமும் இல்லை..” எனக் கூறுகிறார்.
விவாகரத்து பெற்று பிரிந்த ராதிகா
அதன் பின்னர், இனியா குடும்பத்துடன் செல்பி எடுக்க ராதிகாவையும் அழைக்கிறார். அவர் வராமல், “நான் போட்டோ எடுக்கிறேன்..” என அந்த குடும்பத்தை விட்டு விலகியதை அழகாக காட்டியிருந்தார்.
கோபி- ராதிகாவின் விவாகரத்து குறித்து பாக்கியா, செல்வியுடன் ராதிகா அமர்ந்து ஒரு பக்கம் பேசிக் கொண்டிருக்கிறார். இனி எக்காலமும் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்றும் கூறுகிறார்.
அத்துடன், பாக்கியாவும்,“ நான் என்னுடைய வாழ்க்கையை வாழ்கிறேன். எனக்கும் இன்னொரு திருமணம் வேண்டாம்..” என உறுதியாக கூறிவிடுகிறார். இவர்களில் செல்வி மாத்திரம் அவரின் கணவருக்கு ஆதரவாக பேசுகிறார்.
பாக்கியாவிற்கு சம்பந்தியாகும் செல்வி
இந்த நிலையில், பாக்கியா வீட்டு நிகழ்வில் செல்வி மகன் கலந்து கொள்கிறார். அவரை தான் இனியாவும் காதலித்து வருகிறார்.
அதன் பின்னர் பாக்கியாவின் கையால் கேன்டீன் திறக்கப்படுகிறது. அதற்கு பின்னர் செல்வி, “நான் காலையில் அழைத்த போது என்னுடைய மகன் வரவில்லை. தற்போது வந்திருக்கிறார்...” என தோலை தட்டியப்படி கூறுகிறார்.
செல்வியை சம்பந்தியாக பாக்கியா ஏற்றுக் கொண்டாலும், கோபி, ஈஸ்வரி என்ன கூறுவார்கள் என்பது சற்று சந்தேகமாக உள்ளது.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
