'அப்பாவை நான் எங்கேயும் விட மாட்டேன்': ரசிகர்களுக்கு குட்நியூஸ் சொன்ன பாக்கியலட்சுமி எழில்
பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் எழிலில் பதிவு ஒன்று தற்போது அனைவரையும் மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது.
பாக்கியலட்சுமி சீரியல்
பிரபல தொலைக்காட்சியொன்றில் இல்லத்தரசிகளின் வாழ்க்கையை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.
ஆரம்பம் முதல் இன்று வரை அடுத்தடுத்து சுவாரஸ்யமாக நகர்த்துக்கொண்டு இருக்கிறது. இரவு 8.30 மணி ஆகிவிட்டாளே ரிவிக்கு முன் அமர்ந்துக் கொண்டு காத்திருக்கும் மக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இதில் நடிக்கும் கதாப்பாத்திரங்களும் மக்கள் மனதைக் கவர்ந்தவையாகவே உள்ளது. மேலும், இரண்டுப் பொண்டாட்டிகளை வைத்துக் கொண்டு பெரும்பாடு படும் கோபியின் நடிப்பு அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாக மாறிவிட்டது.
தினமும் விறுவிறுப்புக் குறையாமல் ஓடிக் கொண்டிருக்கும் இந்த சீரியலில் கோபியாக நடித்து வரும் சதீஸ் தான் விலகப்போவதாக வருத்தத்துடன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அப்பாவை விட மாட்டேன்
இந்நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் இரண்டாவது மகனாக நடித்து வரும் எழில் என்ற வி.ஜே. விஷால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோபியுடன் இணைந்து இருக்கும் புகைப்படத்தில் பதிவிட்டிருந்தார்.
அந்தப் பதிவில் , `அப்பா நீங்க எங்கேயும் போகக் கூடாது நான் போகவும் விடமாட்டேன்!' எனக் குறிப்பிட்டிருக்கிறார். அதில் ஹாஸ்டேக்கில் கோபி சார் எனவும் தனியாக குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார்.
இதனைப் பார்த்த கோபியின் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் அப்போ சீரியலை விட்டு கோபி போகமாட்டார் என மகிழ்ச்சியுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.