கணவர் கோபியின் திருமணத்திற்கு சமைத்து கொடுக்கும் பாக்கியா! விறுவிறுப்பான ப்ரொமோ காட்சி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் கோபி மனவேதனையுடன் காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
பாக்கியலட்சுமி சீரியல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றது. இந்த சீரியலில் மனைவிக்கு தெரியாமல் தனது காதலியுடன் கணவர் தொடர்பு வைத்துள்ளதாக எடுக்கப்பட்டுள்ளது.
பாக்கியாவிற்கு கோபி செய்யும் துரோகத்தால் ரசிகர்கள் அவரைத் திட்டித் தீர்த்து வரும் நிலையில், அனைவருக்கும் உண்மை தெரிந்து கோபி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
பாக்கியா தனி ஆளாக குடும்பத்தை சமாளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
கோபியின் திருமணத்தில் சமைக்கும் பாக்கியா
கணவர் கோபியிடம் போடப்பட்ட சவாலில் ஜெயிக்க புதிய புதிய யோசனையில் இறங்கியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற சமையல் போட்டியில் கலந்து கொண்ட பாக்கியாவிற்கு தற்போது ஆர்டர் ஒன்று கிடைத்துள்ளது.
குறித்த ஆர்டர் கோபி ராதிகா திருமணத்திற்கு சாப்பாடு செய்வது என்பது தெரியாமல் பாக்கியாவும் சரி என்று பணத்தினை பெற்றுக் கொள்கின்றார்.
உண்மை தெரிந்தால் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் காணப்படும் நிலையில், தற்போது குறித்த ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.