பாக்கியாவிற்காக நேருக்கு நேர் மோதச் சென்ற கோபி... மூக்குடையும் வகையில் பதில் கொடுத்த பழனிச்சாமி
பாக்யாவுடன் இனி பேசி பழக வேண்டாம் என்று சொல்வதற்காக பழனிச்சாமி வீட்டிற்கு கோபத்தோடு புறப்பட்ட கோபிக்கு பழனிச்சாமி சொன்ன பதில் என்ன?
பாக்கியலட்சுமி சீரியல்
பாக்கியலட்சுமி சீரியல் பிரபல தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் பாக்கியலட்சுமி. இது ஒரு இல்லத்தரசியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தொடராகும். இந்த சீரியல் தொடருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

இரவு 8.30 மணி ஆகிவிட்டாளே ரிவிக்கு முன் அமர்ந்துக் கொண்டு காத்திருக்கும் மக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்போடு நாளுக்கு நாள் சுவாரஸ்யம் குறையாமல் நகர்ந்துக் கொண்டிருக்கிறது இந்த தொடர்.
இந்தத் தொடரில் தற்போது பாக்யாவின் நிலைமை அதிரடி காட்டி வரும் பெண் போல காட்டி வருகிறார்கள். கணவனிடம் இருந்து விவாகரத்து பெற்ற பெண் ஒருவர் சந்திக்கும் சவால்களை வைத்து கதை நகர்ந்துக் கொண்டிருக்கிறது.
சீரியலில் இன்று

இந்நிலையில் இன்றைய பாக்கியலட்சுமி சீரியலில், நடக்கும் திருமண ஏற்பாடுகள் எல்லாம் பாக்கியாவிற்கும் பழனிச்சாமிக்கும் என நினைத்து புலம்பிக் கொண்டிருந்த கோபி, நேராக பழனிச்சாமியிடம் பேச வேண்டும் என்று முடிவெடுத்து விட்டார்.
இவ்வாறு முடிவெடுத்தவுடன் நேராக பழனிச்சாமி வீட்டிற்கு சென்று விட்டார். அங்கு சென்றதும் பழனிச்சாமியிடம் நேருக்கு நேராக நின்று நீங்க எதுக்கு அடிக்கடி என்னோட மனைவியை மீட் பண்ணிப் பேசுறீங்க" எனக் கேட்டதற்கு நா உங்க மனைவிய பாத்ததே இல்லனு நக்கலாக சொல்லி சிரிக்கிறார்.

பேச்சை முடிக்காமல் தொடர்ந்தும் பேச ஆரம்பித்த கோபி "சூப்பர் மார்க்கெட்டில் கொஞ்சிப் பேசுறது, சிரிக்கிறது, டியூசன் கிளாசில் லூட்டி அடிக்கிறது, இதை எல்லாத்தையுமே இத்தோட நிறுத்திக்கோ என பழனிச் சாமியை எச்சரிக்கிறார்.
அதற்குப் பழனிச்சாமி அது எங்களோட பேர்சனல் நீங்க உங்க வேலைய பாருங்க என ஆங்கிலத்தில் சொல்லி மாஸ் காட்டியிருக்கிறார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |