பழனிச்சாமியுடன் பாக்கியாவிற்கு இரண்டாவது திருமணமா? எதிர்பாராத டுவிஸ்ட்
பாக்கியா பழனிச்சாமியை தனது வீட்டிற்கு கிளம்பி வந்து பெண் பார்க்குமாறு பேசியதை தவறாக புரிந்து கொண்ட கோபியின் ரியாக்ஷன் ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளது.
பாக்கியா மற்றும் கோபி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னணியில் இருந்து வருகின்றது.
பாக்யாவை வேண்டாம் என்று அவரை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து ஒரே வீட்டில் வசித்து வருகின்றார். இதில் ராதிகாவிற்கும் கோபியின் அம்மாவிற்கும் இடையே நடக்கும் சண்டை தற்போது ரசிகர்களிடையே சுவாரசியத்தை அதிகரித்து வருகின்றது.
ஒரு கட்டத்தில் ராதிகாவை கழுத்தை பிடித்து வெளியே தள்ளிய ஈஸ்வரிக்கு பொலிசார் வந்து எச்சரிக்கை கொடுத்துள்ளனர். இதனால் இனி வரும் காட்சிகள் அனைத்தும் அதிக சுவாரசியத்துடனே செல்ல இருக்கின்றது.
பெண் பார்க்க வரும் பழனிச்சாமி
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரொமோ காட்சியில் பழனிச்சாமிக்கு பாக்கியா போன் செய்து, தனது உறவுக்கார பெண் வருவதாகவும், அவர்களை பெண் பார்க்க நீங்கள் வர வேண்டும் என்று கூறியுள்ளார்.
பின்பு தொடர்ந்து பழனிச்சாமியிடம் எதார்த்தமாக பேசுவது அனைத்தும் பாக்கியாவை பெண் பார்க்க வருவதாக கோபி நினைத்து புலம்பி வருகின்றார்.
கதையின் போக்கு நாளுக்கு நாள் சுவாரசியமாகிக்கொண்டே வருவதால் ரசிகர்கள் பயங்கர எதிர்பார்ப்பில் காணப்படுகின்றனர்.