பாக்கியலட்சுமியில் ராதிகாவுக்கு மூன்றாவது திருமணம்?
பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் ராதிகா திருமணம் குறித்து ரசிகரின் கேள்விக்கு பதிலளித்திருக்கிறார்.
பாக்கியலட்சுமி ராதிகா
பிரபல தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் பாக்கியலட்சுமி. இது ஒரு இல்லத்தரசியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தொடராகும்.
இந்த சீரியலில் பாக்கியாவிற்கு நிகராக நடித்து வரும் ராதிகா தான். ராதிகா பாக்கியாவிற்கு வாழ்க்கையில் புகுந்து கோபியை சொந்தமாக்கிக் கொண்டவர்.
இந்த சீரியலில் ராதிகா கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் ரேஷ்மா இதற்கு முன் மசாலா படம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
அதைத்தொடர்ந்து கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.
பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்றாவது திருமணம்
சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் ராதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வருவார்.
இந்நிலையில், அண்மையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைவில் ரசிகர்களிடம் பேசிய ராதிகா ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அளித்த பதில் தற்போது வைரல் ஆகியுள்ளது.
அதில், ராதிகாவைப் பார்த்து உங்களை கல்யாணம் செய்துக் கொள்ள ஆசைப்படுகிறேன் என்று சொல்ல அவரின் கேள்விக்கு பதில் சொன்ன ராதிகா எனக்கு திருமணம் செய்துக் கொள்ள ஓகே தான், ஆனால் என் அம்மா தான் சம்மதிக்க மாட்டார் என்று பதிலளித்திருக்கிறார்.