“சம்யுக்தாவை பார்க்கும் போதெல்லாம் காதலிக்க தோன்றுகிறது” தனுஷ் பட நடிகையை வர்ணிக்கும் பாரதிராஜா
வாத்தி திரைப்பட நடிகையை பார்க்கும் போதேல்லாம் காதலிக்க தோன்றுகிறது என்று இயக்குனரும் நடிகருமான பாரதிராஜா நிகழ்வொன்றில் கூறிய விடயம் தற்போது பேசப்பட்டு வருகிறது.
வாத்தி திரைப்படம்
தனுஷ் நடிப்பில் இம்மாதம் வெளியாகவிருக்கும் திரைப்படம் தான் வாத்தி. இப்படத்தை வெங்கி அத்லூரி இயக்கியிருக்கிறார். ஜி.வி.பிரகாஷ்ராஜ் இசையமைத்திருக்கிறார். வாத்தி திரைப்படமானது தெலுங்கில் சார் என்ற பெயரில் உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், இப்படத்தில் சம்யுக்தா, பாரதிராஜா, அசுரன் புகழ் கென் கருணாஸ், சமுத்திரக்கனி என பலர் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றிருந்தது.
இத்திரைப்படம் பெப்ரவரி 17ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காலம் தப்பி பிறந்து விட்டேன்
இந்நிகழ்வில் இயக்குனரும் நடிகருமான பாரதிராஜாவை பேச மேடைக்கு அழைத்திருந்தார். அப்போது மேடையில் பேச ஆரம்பித்த பாரதிராஜா என் இனிய தமிழ் மக்களே என ஆரம்பித்து பேச தொடங்கினார்.
அதில் அவர் பேசியதாவது, சம்யுக்தாவை பார்க்கும் போதெல்லாம் காதலிக்க தோன்றுகிறது. கடலோர கவிதைகள் படத்தில் ஒரு டீச்சரை அறிமுகப்படுத்தினேன். சம்யுக்தாவை பார்க்கும்போது காலம் தப்பி பிறந்து விட்டோனோ என தோன்றுகிறது.
அவரை காதலிக்காமல் இருக்கவில்லை. இருந்தாலும் இப்போதும் சம்யுக்தாவை காதலிக்கிறேன் என பேசியிருந்தார்.
மேலும், தனுஷ், ஜி.வி.காலில் விழுவேன். ஜி.வி. பிரகாஷ் கடவுளின் குழந்தை. தனுஷ் சிறந்த கலைஞன் மற்றும் நல்ல மனிதன் இவர்கள் இருவரும் வயதில் சிறியவர்களாக இருக்கிறார்கள் இல்லையென்றால் காலில் விழுந்து விடுவேன் எனவும் தெரிவித்திருதார்.