அட பாக்கியலட்சுமி ரித்திகாவின் மகளா இது? கிருஷ்ணர் வேடத்தில் எப்படி இருக்காங்க பாருங்க
சீரியல்நடிகை ரித்திகா தமிழ் செல்வி கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷலாக குழந்தையுடன் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
ரித்திகா தமிழ் செல்வி
பிரபல தொலைக்காட்சியில் 1000 எப்பிசோடுகளை கடந்து வெற்றிகரமாக முடிவடைந்த பாக்கியலட்சுமி சீரியல் மூலம் பிரபல்லயம் ஆனவர் தான் ரித்திகா தமிழ் செல்வி.
பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபலமானார். இந்த கதாப்பாத்திரம் அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் ஒரு அடையாளத்தையும் கொடுத்தது.
அவருக்கு ஹிட் கொடுத்த பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். கடந்த 2022ஆம் ஆண்டு ரித்திகா தமிழ் செல்விக்கு வினு என்பவருடன் கேரள முறைப்படி வெகு விமர்சையாக திருமணம் நடைபெற்று புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது.
அதனை தொடர்ந்து ரித்திகா கர்ப்பமாக இருக்கும் நிலையில் கணவருடன் சேர்ந்திருக்கும் அழகிய தருணங்களையும் காணொளியாக வெளியிட்டார்.இவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் தற்போது கிருஷ்ண ஜெயந்தியில் குழந்தைக்கு குட்டி கிருஷ்ணன் கெட்டப்போட்டு தனது குழந்தையுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |