பாக்கியலட்சுமி ராதிகா மகனை பார்த்துருகீங்களா.. என்ன செய்கிறார் தெரியுமா?
பாக்கியலட்சுமி ராதிகா அவருடைய ஆசை மகனுடன் கொஞ்சு விளையாடும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகை ரேஷ்மா
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “பாக்கியலட்சுமி” என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் நடிகை ரேஷ்மா.
இவர், வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்து பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார்.
அதன் பின்னர் சீரியல்களில் தன்னை அடையாளப்படுத்தும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து, டாப் சீரியல் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். அதற்கு முன்னர் பிக்பாஸ் சீசன் 3யிலும் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக இருந்தார்.
சின்னத்திரை, வெள்ளித்திரை, பிசினஸ் மற்றும் ஃபிட்னஸ் என அனைத்திலும் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா, பேட்டியொன்றில் தன்னுடைய மகன் லண்டனில் சென்று படிக்க ஆசைப்படுதாக கூறியிருந்தார்.
இவ்வளவு பெரிய மகனா?
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ராதிகா மகனுடன் இருக்கும் காணொளியை பகிர்ந்திருக்கிறார்.
காணொளியை பார்த்த இணையவாசிகள், “உங்களுக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கா?” எனக் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |