அடக்க முடியாத கண்ணீருடன் வந்த நடிகை -தட்டிக் கொடுத்து அனுப்பிய தோழி
பிக்பாஸ் சீசன் 9 வீட்டிற்குச் செல்லும் முன்னர் நடிகை ஆயிஷா அழுதுக் கொண்டு செல்லும் காட்சி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பிக்பாஸ் ஆயிஷா
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய “சத்யா” சீரியலில் நடித்து பிரபல்யமாகியவர் தான் ஆயிஷா.
இதனை தொடர்ந்து பல சீரியல்கள் நடித்தாலும் சத்யா சீரியல் போல் வரவில்லை. அதன் பின்னர் ஆயிஷாவிற்கு பெரியளவில் வாய்ப்புகள் இல்லை. இதனால் பிக்பாஸ் சீசன் 6 முக்கிய போட்டியாளராக உள்நுழைந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின்னர் காதலர் தினத்தன்று தன்னுடைய காதலரை அறிமுகப்படுத்தியிருந்தார். அந்த புகைப்படங்களை தொடர்ந்து நிச்சியதார்த்த புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து காதலர்கள் தின சப்ரைஸ் காட்சிகளையும் அவரின் சமூக வலைத்தளங்களில் நேரலையில் காட்டியிருந்தார். ஆனால் தற்போது இருவரும் ஒன்றாக இல்லையாம், திருமணம் பாதியில் நிறுதப்பட்டது என்ற செய்திகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.
மீண்டும் ஒரு வாய்ப்பு
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஆயிஷா தற்போது பிக்பாஸ் சீசன் 9 தெலுங்கில் வைல்ட் கார்ட் என்றியில் உள்ளே நேற்றைய தினம் சென்றுள்ளார்.
அவர் மேடையில் நடனம் ஆடியது, அதன் பின்னர் நடிகர் நாகார்ஜுனாவிற்கே கட்டியனைத்து தைரியம் கொடுத்தது ஆகிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.
இதனை தொடர்ந்து தற்போது மேக்கப் போடும் பொழுது அழுது புலம்பிய காட்சியொன்றை அவருக்கு மேக்கப் செய்த பெண்ணொருவர் பகிர்ந்துள்ளார்.
அழுதுக் கொண்டிருக்கும் ஆயிஷாவை தட்டிக் கொடுத்து உள்ளே அனுப்பும் காட்சியை பார்த்த பலரும் ஆயிஷாவிற்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |