தோல்வியை சந்தித்த பாக்கியா! வில்லியாக ராதிகா செய்த சதி: அதிருப்தியான ப்ரொமோ காட்சி
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா தேர்தலில் வெற்றிபெற்றதையடுத்து, இதனை பொறுத்துக்கொள்ள முடியாத ராதிகா வில்லியாக மாறி பாக்கியாவை தோல்வியை சந்திக்க வைத்துள்ளார்.
பாக்கியலட்சுமி சீரியல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றது. மனைவிக்கு தெரியாமல் காதலியுடன் தொடர்பு வைத்து பின்பு அவரையே வீட்டை எதிர்த்து திருமணம் செய்துள்ளார்.
கோபியுடன் இனியாவும், பாக்கியாவை விட்டு அவரது வீட்டில் இருக்கும் நிலையில், இனியாவிற்கு புரியவைக்க ராதிகாவின் வீட்டிற்கே தாத்தா வந்துவிட்டார்.
அவர் வந்த தருணத்தில் வீட்டில் சரியான கொமடி அரங்கேறியதுடன், ராதிகாவையும் சீண்டி கொமடியில் கலக்கினார்.
இந்நிலையில், கோபி ராதிகா இருவரும் தங்களது குடியிருப்பு பகுதியில், தேர்தலுக்கு போட்டியிட்டுள்ளனர். இதில் ராதிகா குறைவான வாக்கு பெற்று தோல்வியை சந்தித்த நிலையில், பாக்கியா, ராதிகாவை விட பல மடங்கு வாக்கு அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
தற்போது பாக்கியாவிற்கு புதிய கேண்டீன் ஆர்டர் கிடைத்துள்ளது. இந்த கேண்டீன் இருக்கும் அலுவலகத்தில் தான் ராதிகா பணியாற்றி வருகின்றார்.
தேர்தலின் போது பாக்கிய பேசியதற்கு தண்டனை கொடுக்கும் விதமாக குறித்த ஆர்டரை கேன்சல் செய்ய வைத்துள்ளார். இதில் பாக்கியா உடைந்து போயுள்ளார்.
இதுவரை வில்லியான தனது கோபத்தினை வெளிக்காட்டாத ராதிகாவின் புதிய மாற்றம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.