Baakiyalakshmi: ராதிகாவிடம் சென்ற கோபி... மீண்டும் வந்து ஈஸ்வரிக்கு கொடுத்த ஷாக்
பாக்கியலட்சுமி சீரியலில் கோபி ராதிகாவை பாக்கியா வீட்டிற்கு அழைத்து வந்து ஈஸ்வரிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண் கணவர் வீட்டில் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் அவர் துணையில்லாமல் வாழ்ந்து காட்டும் கதையை கொண்டு செல்கின்றது.
கணவர் கெட்டவராக இருந்தாலும் தனது கடமையை சரியாக செய்து வருகின்றார். தற்போது கோபி பாக்கியா வீட்டில் தான் வசித்து வருகின்றார்.
இந்நிலையில் கோபிக்கு பாக்கியா அறிவுரை கூறி ராதிகாவை காண்பதற்கு அனுப்பி வைத்துள்ளார். இதற்கு ஈஸ்வரி சம்மதம் தெரிவிக்காத நிலையில், கோபி அம்மாவின் பேச்சை கேட்காமல் சென்றுள்ளார்.
அங்கு ராதிகாவை பார்த்துவிட்டு மீண்டும் பாக்கியாவின் வீட்டிற்கு கோபி திரும்பியுள்ளார். இதனால் ஈஸ்வரி மகிழ்ச்சியில் மூழ்கிய நிலையில், ஆனால் கோபி கடைசியாக ஒரு டுவிஸ்ட் வைத்துள்ளார்.
அதாவது ராதிகா மற்றும் மயூ இருவரையும் சேர்த்தே பாக்கியாவின் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். கோபியின் இந்த செயல் ஈஸ்வரியை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |