Super singer மேடையை அமர்களப்படுத்திய சிறுமி.. கண்ணீரில் அரங்கம்-புல்லரித்து போன நடுவர்
Super Singer மேடையில் பாடிய சிறுமியின் குரலை பார்த்து அரங்கத்தில் உள்ளவர்கள் கண்ணீருடன் சிந்தியுள்ளனர்.
Super Singer நிகழ்ச்சி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 நிகழ்ச்சி பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகர்களாக வலம் வருகிறார்கள். ஒவ்வொரு வருடமும் சூப்பர் சிங்கர் சீனியர் மற்றும் ஜூனியர் என்று நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
இதன்படி, சமீபத்தில் தான் சீனியர்களுக்கான நிகழ்ச்சி முடிவடைந்தது. தொடர்ந்து தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் ஆறு வயது முதல் 15 வயதிற்கு உட்பட்ட பல குழந்தைகள் கலந்து கொண்டு தங்களின் திறமையால் நடுவர்களிடம் பரிசுகளை வாங்கி குவித்து கொண்டிருக்கிறார்கள்.
கண்ணீர் வர வைத்த சிறுமி
இந்த நிலையில், இந்த சீசனில் திறமையான குழந்தைகள் பலர் கலந்துக் கொண்டுள்ளனர்.
அந்த வகையில் பக்தி பாடல்கள் சுற்றில் சிறுமியொருவர்,“தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா..” என்ற பாடலை பாடியுள்ளார்.
இந்த பாடலை கேட்டு அரங்கத்தினர் மட்டுமல்லாமல் நடுவர்களும் கண்கலங்கியுள்ளனர்.
பாடல் முடிந்த பின்னர் எழுந்து மேடைக்கு வந்த சித்ரா அம்மா சிறுமியை வாழ்த்தியதுடன், “மிகவும் உணர்வுபூர்வமாக இருந்தது..” என்றும் கூறி சென்றுள்ளார்.
இப்படியாக இந்த வாரத்திற்கான ப்ரோமோக்கள் வர ஆரம்பித்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |