ரொமான்டிக் புகைப்படத்துடன் காதலை வெளிபடுத்திய பிரபலங்கள்.. வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்
தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடித்து பிரபலமான சங்கீதா சாய் மற்றும் சீரியல் நடிகர் அரவிந்த் சேஜு இருவரும் காதலிப்பதாக அறிவித்துள்ளனர்.
சீரியல் நடிகை சங்கீதா
சின்னத்திரை பிரபலங்களின் காதல் கதைகள் வரவர அதிகமாகிக் கொண்டே செல்கிறது.
அந்த வகையில், விஜேவாக இருந்து சீரியல் நடிகையாக மாறியவர் தான் நடிகை சங்கீதா சாய். இவர் சுமாராக 5 வருடங்கள் ஐடி துறையில் பணியாற்றி கொண்டிருந்தார்.
அதன் பின்னர், தன்னுடைய தோழி ஒருவர் சன் மியூஸிக்கில் விஜேவாக இருப்பதை பார்த்து ஆசைப்பட்டு, விஜே ஆடிஷனில் கலந்து கொண்டார்.
அணைத்து சுற்றிலும் வெற்றி பெற்று விஜேவாக தேர்வானார். தொடர்ந்து 3 மாதங்கள் வரை விஜேவாக பணியாற்றி வந்த கொண்டே, ஐடி வேலையும் செய்து வந்த சங்கீதா, பின்னர் ஐடி வேலையை உதறிவிட்டு முழு நேர விஜேவாக மாறினார்.
திருமண அறிவிப்பு
இந்த நிலையில் சங்கீதாவிற்கு சீரியல் வாய்ப்பு வர ஆரம்பித்தது. முதலில் பாசிட்டிவான கதாபாத்திரம் நடித்து வந்தவர், காலங்கள் சென்றதும் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்க அதிலும் நடித்து வந்தார்.
30 வயதை கடந்த பின்னரும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த சங்கீதா தற்போது தன்னுடைய திருமணம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சங்கீதா சாய், டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வந்த “கனகாணும் காலங்கள் சீசன் 2” தொடரில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சாய் பல்லவிக்கு பின்னர் மலர் டீசர் அதிகப்படியான இளசுகளை கவர்ந்தார்.
இந்த தொடரில் மாணவராக நடித்த அரவிந்த் சேஜு என்பவரை தான், சங்கீதா திருமணம் செய்து கொள்ள உள்ளாராம்.
இவர்கள் ரொமான்டிக்காக எடுத்து கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |