Baakiyalakshmi: கோபியிடமிருந்து ஒதுக்கப்படும் ராதிகா... சுற்றுலா செல்லும் இடத்தில் நடப்பது என்ன?
பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா பாக்கியாவிடம் வெளியே டூர் செல்வதற்காக கேட்டுள்ள நிலையில், சென்ற இடத்தில் எடுக்கப்போகும் முடிவு என்ன என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண் கணவர் வீட்டில் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் அவர் துணையில்லாமல் வாழ்ந்து காட்டும் கதையை கொண்டு செல்கின்றது.
கணவரைப் பிரிந்து தனி ஆளாக பிள்ளைகள் மற்றும் மாமியாரைக் கவனித்து வருகின்றார் பாக்கியா. தற்போது கோபி மற்றும் ராதிகா இருவரும் பாக்கியா வீட்டில் தான் தங்கியுள்ளனர்.
கோபி தற்போது எந்தவொரு பழிவாங்கும் எண்ணம் இல்லாமல் பாக்கியாவிற்கு உதவி செய்து வருகின்றார். இந்நிலையில் குடும்பத்தில் ஈஸ்வரி, இனியா ராதிகாவை வெளியேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அடுத்தடுத்து குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பாக்கியாவிடம் ராதிகா 3 நாள் சுற்றுலா சென்று வருவோமா? என்று கேட்டுள்ளார். சுற்றுலா செல்லும் இடத்தில் ராதிகா எடுக்கும் திடீர் முடிவு என்னவாக இருக்கும் என்று பார்வையாளர்கள் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |