செய்த உதவிக்கு ரொம்ப நன்றி மேடம்! ஆனா...கையெடுத்து கூம்பிடும் பாக்கியா: சூடுபிடிக்கும் கதைக்களம்
ராதிகாவின் நிலை குறித்து பாக்கியா பக்குவமாக பேசி புரிய வைத்துள்ளார்.
பாக்கியலட்சுமி சீரியல்
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக செல்லும் தொடர் தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியலில் ஆரம்பத்தில் கோபி - பாக்கியாவாக நகர்ந்து கொண்டிருக்கிறது.
இதனை தொடர்ந்து கோபியின் பழைய காதலி ராதிகாவை கொண்டு வந்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.
தற்போது ராதிகா - பாக்கியா - கோபி என மூன்று பேரும் ஓரே வீட்டில் இருந்து வருகிறார்கள். இவர்களில் இருவருக்கும் சண்டைகள் எதிர்வரும் எபிசோட்களில் அனல் பறக்கவிருக்கிறது.
ராதிகாவின் நிலை குறித்து பேசிய பாக்கியா
இந்த நிலையில் ஜெனி வழுக்கி கீழே விழுந்து வயிற்றில் அடிப்பட்டுள்ளது. இதனை பார்த்த ராதிகா உடனடியாக சென்று மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
பாக்கியாவிற்கும், செழியனுக்கு கோல் செய்து ஜெனியின் நிலை குறித்து அறிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து பாக்கியா, ராதிகாவிற்கு நன்றி கூறியதுடன்,“ நீங்க உங்க வாழ்க்கையை தொலைத்து விட்டீர்கள், பாவமாக இருக்கிறது என பாக்கியா உருக்கமாக பேசியுள்ளார்.
பாக்கியாவின் பேச்சை கேட்டு, ராதிகாவும் அவர் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை நினைத்து பார்க்கிறார்.
இதனை பார்த்த ரசிகர்கள், “கடைசியில் பாக்கியாவும், ராதிகாவும் ஒன்று சேர்ந்து விடுவார்கள் போலயே” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.