பாக்கியாவை மீறி கோபிக்கு காபி போட்ட பாட்டி.. ராதிகா கொடுத்த தரமான அடி! சூடுபிடிக்கும் சீரியல்
பாட்டி போட்டு கொடுத்த காபியை ராதிகா தட்டி விட்டு மறுபடியும் பிரச்சினையை ஆரம்பித்துள்ளார்.
பாக்கியலட்சுமி சீரியல்
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக செல்லும் தொடர்களில் ஒன்று தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியல், பெங்காலி மொழியில் ஒளிபரப்பாகிய “ஸ்ரீமோயி” என்ற சீரியலின் ரீமேக்காக தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது.
மேலும் பாக்கியலட்சுமி சீரியலின் வசனங்கள் மற்றும் கதையம்சங்களை லீனா மற்றும் சங்கீதா என இரண்டு பேர் கவனித்து வருகிறார்கள்.
இதனை தொடர்ந்து கடந்த 2020ம் ஆண்டு ஜுலை 27ம் திகதி பாக்கியலட்சுமி தொடர் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் சுமார் 2 ஆண்டு காலமாக மக்கள் மத்தியில் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது.
ராதிகாவால் உடைக்கப்பட்ட காபி கப்
அந்த வகையில் தற்போது வெளியான ப்ரோமோவில் பாக்கியாவை கோபிக்கு காபி போட்டு கொடுக்கும் படி பாட்டி கூறியுள்ளார்.
ஆனால் பாக்கியாவிற்கு கோபம் வந்து முடியாது என பதிலளித்துள்ளார். பின்னர் பாட்டியே கோபிக்கு காபி போட்டு கொடுத்து அனுப்பியுள்ளார்.
அந்த காபியை கோபியை குடிக்க விடாமல் ராதிகா தட்டி விட்டுள்ளார். இதனை காபியை கொடுத்த இனியாவை கேட்டுள்ளார்.
இந்த காட்சியை பார்த்த பாக்கியா ரசிகர்கள், இவருக்கு இன்னும் வேண்டும்” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.