அம்மாவை டார்ச்சர் செய்தீங்களா? ராதிகாவுடன் போகக்கூடாது! இனியாவின் நெருக்கடியால் சிக்கலில் கோபி
பாக்கியலட்சுமி சீரியிலில் நடித்து வரும் கோபியிடம் இனியா பயங்கரமாக கேள்வி கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் நாயகனாக நடித்திருக்கும் கோபி ரசிகர்களால் வெறுத்து ஒதுக்கப்பட்ட நபராக இருந்து வந்தார்.
குறித்த சீரியல் அனைத்து பெண்களையும் கவர்ந்துள்ள நிலையில், அன்றாடம் குடும்ப பெண்கள் சந்திக்கும் பிரச்சினையை வெளியே எடுத்துக் காட்டி வருகின்றது.
இதில் பாக்கியாவிற்கு கணவராக நடிக்கும் கோபி ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்து வந்த நிலையில், சீரியலை விட்டு விலகுவதாக அறித்து பின்பு தொடர்ந்து நடித்து வருகின்றார்.
இனியாவின் நெருக்கடி
இந்நிலையில் கோபியின் நடவடிக்கை நாளுக்கு நாள் மோசமாகி சென்றதால் ஆத்திரமடைந்த ஈஸ்வரி ராதிகாவை விவாகரத்து செய் என்று கூறியுள்ளார்.
இதனால் ராதிகாவிற்கு பயம் ஏற்பட்டுள்ளது. மற்றொரு புறம் இனியா தனது தந்தையுடன் காரில் பயணித்து வரும் போது, அம்மாவை நீங்கள் ரொம்ப டார்ச்சர் செய்தீர்களா? இனிமேல் குடிக்கக்கூடாது... ராதிகாவுடன் போகக்கூடாது என்று பல கண்டிஷனை போட்டுள்ளார்.
இனியாவின் கண்டிஷனை கேட்ட கோபி ஒன்றும் பேசமுடியாமல் திக்கித் திணறியுள்ளார். கதையின் போக்கு வித்தியாசமாக இருப்பதால் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக இருக்கின்றது.