வழியே வந்து வம்பிழுக்கும் ராதிகா! கொந்தளித்த எழில்.. இனி நடக்க போவது என்ன?
பாக்கியா தான் ஒழுக்கம் என்று பேசுபவர்கள் எல்லாம் கண்டிப்பாக ஒரு நாள் மாறுவார்கள் என ராதிகா பாக்கியாவிடம் சவால் விட்டுள்ளார்.
பாக்கியலட்சுமி சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாகச் சென்றுக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியலில் ஆரம்பத்திலிருந்து பாக்கியாவிற்கு நல்ல வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கின்றது.
மேலும் பாக்கியா தான் இந்த சீரியலின் கதாநாயகி என்பதால் இவரின் ட்ரோலுக்கு தனி மரியாதையும் இருந்து வருகின்றது.
தன்னுடைய கணவர் இரண்டாவது திருமணம் செய்தாலும் அவரை எதுவும் கூறாமல் அவர் போக்கில் விட்டு தன்னுடைய வேலைகளை சரியாக பார்க்கும் பாக்கியாவின் தைரியம் இல்லத்தரசிகளின் இதயங்களை வென்றுள்ளது.
பாக்கியாவை வம்புக்கு இழுக்கும் ராதிகா
இந்த நிலையில் பாக்கியாவை வேகு பார்க்கும் கோபியை ராதிகா தடுக்காமல் அவருடன் இணைந்து பாக்கியா ஒரு கெட்டவள் என கூறுவதற்கு வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
“நான் மட்டும் கெட்டவள், பாக்கியா நல்லம் என்று கூறுபவர்கள் அனைவரும் கண்டிப்பாக மாறுவார்கள்” என ராதிகா பாக்கியாவிடம் சவால் விட்டுள்ளார்.
இதனை பார்த்து கொண்டிருந்த எழில் “எங்க அம்மா ஏங்க அதுக்கெல்லாம் கவலைப்படனும்” என முகத்தில் அடித்தாற் போல் பதிலடிக் கொடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து கோபி பேசும் போது “நான் உங்களை பார்த்தேன் அப்படியே பயந்து போய் இருந்தீர்கள் ” என பாக்கியாவை மீண்டும் மீண்டும் கடுப்பாக்கிக் கொண்டே இருந்துள்ளார்.
இந்த காட்சியை பார்த்த ரசிகர்கள்,“ ராதிகா தான் இந்த வீட்டில் நடக்கும் அனைத்து பிரச்சினைக்கும் காரணம்” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.