கெட்ட வார்த்தையில் கோபியை திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்.. விரைவில் சீரியலை விட்டு ஓடிடுவாரா?
கெட்ட வார்த்தையில் கமண்டுகள் வருவதால் மன வறுத்தத்தில் சீரியல் கோபி இருப்பதாக ஒரு வீடியோக்காட்சியை வெளியிட்டுள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.
அந்த வகையில் பாக்கியாவின் இரண்டாவது மருமகள் அமிர்தா குழந்தையுடன் தனியாக இருப்பதை தெரிந்து கொண்ட எழில், அமிர்தாவை காதலித்து பல இன்னல்களுக்கு மத்தியில் திருமணம் செய்து கொள்கிறார்.
ஆரம்பத்தில் பாக்கியாவின் வீட்டில் யாரும் ஏற்றுக் கொள்ளாத நிலையில் தற்போது அனைவரும் ஒன்றாக வாழ்ந்து வருகிறார். அத்துடன் நிலாவையும் அவர்கள் வீட்டு பிள்ளையாக ஏற்றுக் கொள்கிறார்கள்.
கோபியின் திட்டித்தீர்க்கும் இணையவாசிகள்
இந்த நிலையில் பாக்கியா, இனியாவின் கல்லூரி டூர் விடயமாக கேரளாவில் இருக்கிறார்.
பாக்கியாவை கோல் செய்து கோபி அடிக்கடி திட்டி வருகிறார்.
அத்துடன் நிறுத்தாமல் மகளையும் அம்மாவை கவனமாக அழைத்து வராவிட்டால் என்ன நடக்கும் என்று தெரியாது என கேவலமாக பேசுகிறார்.
இதனை பார்த்த ரசிகர்கள் கோபியின் இன்ஸ்டா கணக்கை கண்டுபிடித்து கேவலமாக கமண்டுகளை வாரி வழங்கி வருகிறார்கள்.
கவலையுடன் வெளியான காட்சி
கமண்ட்களை பொறுத்து கொள்ள முடியாத கோபி..“ சினிமாக்காரர்கள் நாலு காசு பார்ப்பதற்குள் எத்தனை பேச்சு வாங்க வேண்டி இருக்கு..” என மிகவும் கவலையுடன் வீடியோ வெளியிட்டுள்ளார்.
இந்த காட்சியை பார்த்த இணையவாசிகள், “ கோபி சீக்கிரமாக சீரியலை விட்டு ஓடி விடுவார்..” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |