நா முட்டாள் இனி சீரியலில் இருக்க மாட்டேன்.. ஆவேசமாக பொங்கிய பாக்கியலட்சுமி கோபி
நான் ஒரு முட்டாள் என பாக்கியலட்சுமி கோபி கூறிய காட்சி இணையவாசிகளை மிரள வைத்துள்ளது.
பாக்கியலட்சுமி சீரியல்
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக செல்லும் தொடர் தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியலின் கதை மற்றைய சீரியல்களை விட சற்று வித்தியாசமாக காணப்படுகிறது.
இரண்டாவது திருமணம் செய்து கொண்டு முதல் மனைவி வீட்டிற்கு வந்திருக்கும் கோபியின் செயல் ரசிகர்களை விறுவிறுப்பாக்கியுள்ளது.
கோபியுடன் தான் நான் இருப்பேன் என பையுடன் ராதிகா, பாக்கியாவின் வீட்டிற்கு வந்துள்ளார்.
நான் ஒரு முட்டாள்...
இந்த நிலையில் இன்னும் சில நாட்களில் நான் சீரியலை விட்டு விலகி விடுவேன் இதற்கு யாரும் காரணமில்லை.
என்னுடைய தனிப்பட்ட பிரச்சினை என பாக்கியலட்சுமி கோபி கூறியுள்ளார். இதனை தொடர்ந்து இவர் பற்றிய பல கிசுகிசுக்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்படுகிறது.
மேலும் தற்போது பாக்கியலட்சுமி சீரியல் கோபி, நான் ஒரு முட்டாள் இப்போது தான் எனக்கு புத்தி வந்தது” என கூறிய வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த ரசிகர்கள், அப்படி என்ன நடந்திருக்கும் கோபிக்கு என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.