இப்படி நாகரீகம் இல்லாமல் வீட்டுக்குள்ள போகக்கூடாது... கோபியுடன் மோதும் நடிகர் ரஞ்சித்! மாஸான ப்ரொமோ
பாக்கியலட்சுமி சீரியிலில் நடித்து வரும் கோபியை பழனிச்சாமியாக நடித்து வரும் நடிகர் ரஞ்சீத் பங்கமாக அசிங்கப்படுத்தியுள்ள ப்ரொமோ வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் நாயகனாக நடித்திருக்கும் கோபி ரசிகர்களால் வெறுத்து ஒதுக்கப்பட்ட நபராக இருந்து வந்தார்.
குறித்த சீரியல் அனைத்து பெண்களையும் கவர்ந்துள்ள நிலையில், அன்றாடம் குடும்ப பெண்கள் சந்திக்கும் பிரச்சினையை வெளியே எடுத்துக் காட்டி வருகின்றது.
இதில் பாக்கியாவிற்கு கணவராக நடிக்கும் கோபி ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்து வந்த நிலையில், தற்போது பாக்கியா வீட்டிலேயே ராதிகாவுடன் வசித்து வருகின்றார்.
பாக்கியாவிற்கு நண்பராக நடிகர் ரஞ்சித்தை களமிறக்கி விறுப்பாக செல்லும் இக்கதையில் தற்போது, பாக்கியாவின் வீட்டிற்கு விருந்தினராக ரஞ்சித் வந்துள்ளார்.
அத்தருணத்தில் கோபி வீட்டிற்குள் வரவே கோபியை நிற்கவைத்து, சேல்ஸ் மேன்னா? இப்படி நாலு பேரு இருக்கும்போது நாகரீகம் இல்லாமல் வீட்டுக்குள்ள போகக்கூடாது என்று கூறி அசிங்கப்படுத்தியுள்ளார்.
ரஞ்சித்தின் இந்த கேள்வியை அவதானித்த குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியில் காணப்படுகின்றனர்.