இனி பாக்கியலட்சுமி சீரியல்ல இது கஷ்டம்... உண்மையை உடைத்து கோபி வெளியிட்ட காணொளி

Manchu
Report this article
பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், கோபி வெளியிட்டுள்ள காணொளி வைரலாகி வருகின்றது.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில், கோபியை மகன் இல்லை என்று கூறி ஈஸ்வரி தலைமுழுகியுள்ளார்.
கோபியும் பெற்ற தாயை தவறு செய்திருப்பார் என்று சந்தேகம் ஏற்பட்டு அவருக்கு எதிராகவே இருந்திருந்தார்.
கடைசி நிமிடத்தில் ஈஸ்வரி மீது தவறு எதுவும் இல்லை என்று நிரூபித்து பாக்கியா வெளியே கொண்டு வந்துள்ளார்.
தற்போது ஈஸ்வரியை பார்க்க வந்த கோபியிடம் தனக்கு இனி அப்படியொரு மகன் இல்லை... ஒரே ஒரு மகள் மட்டுமே... அது பாக்கியா தான் என்று கூறி கோபியை அனுப்பியுள்ளார்.
சதீஷ் வெளியிட்ட காட்சி
இந்நிலையில் கோபி கதாபாத்திரத்தில் நடிக்கும் சதீஷ் காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
இனிமேல் பாக்கியலட்சுமி சீரியலில் என்ன நடக்கப் போகிறது என்பதை கூறியுள்ளார். அதாவது இனிமேல் பாக்கியலட்சுமியில் காமெடி சீன்ஸ் கஷ்டம். நீங்களே பார்த்தீங்க கோர்ட், அது இதுனு எப்படி குழப்பமாக போயிக்கிட்டு இருக்கு.
இன்னும் நிறைய குழப்பங்கள், பல திருப்பங்கள், சோக விஷயங்கள் எல்லாம் நடக்கும். இது நடுவுல நான் போய் காமெடி பண்ணினால் அது பயங்கர காமெடியாகிவிடும்.
அதனால் 50, 100 எபிசோடுக்கு காமெடி கஷ்டம். ஃபுல்லா அழும் காட்சி தான். இந்த வீடியோவைப் பார்த்தால் இயக்குனர் ஃபீல் பண்ணி, கோபிக்கு ஊத்திக் கொடுப்போம், காமெடி பண்ண வைப்போம்னு நினைத்தால் உண்டு என்று கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |