Neeya Naana: மரணத் தருவாயில் அம்மா கூறிய ஒற்றை வார்த்தை... அரங்கத்தில் கண்கலங்கிய கோபிநாத்
நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரம் வறுமையிலும் பெரிய மதிப்பெண்களுடன் ஜெயித்த 12ம் வகுப்பு மாணவர்கள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாக இருக்கும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
இந்த வாரம் எடுத்துக் கொண்ட தலைப்பு வறுமையிலும் பெரிய மதிப்பெண்களுடன் ஜெயித்த 12ம் வகுப்பு மாணவர்கள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
வறுமையிலும் 12ம் வகுப்பு தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுடன் ஒரு உரையாடல் நடத்தப்பட்டுள்ளது. இவர்களின் பெற்றோர்கள் செய்யும் வேலை, அவர்கள் படும் கஷ்டங்கள், தனது ஆசிரியர்களின் உதவி என அனைத்தையும் அரங்கத்தில் கூறியுள்ளனர்.
ஒரு மாணவர் தற்போது 12ம் வகுப்பு முடித்திருக்கும் நிலையில் இவரது தந்தை 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாராம். தாயும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இறந்துள்ளார்.
ஆனால் அவர் படுக்கையில் கூறிய வார்த்தைகளை மனதில் வைத்துக்கொண்டு குறித்த மாணவர் இவ்வாறு படித்துள்ளது கோபிநாத்தையே வியக்க வைத்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |