ஏன் ராதிகா படுத்துற? கோபத்தில் கொந்தளித்த கோபியை பார்த்து ஷாக்கில் ராதிகா
பாக்கியலட்சுமி சீரியிலில் நடித்து வரும் கோபி ராதிகாவை கோபத்தில் சரமாரியாக கேள்விகளை கேட்டுள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் நாயகனாக நடித்திருக்கும் கோபி ரசிகர்களால் வெறுத்து ஒதுக்கப்பட்ட நபராக இருந்து வந்தார்.
குறித்த சீரியல் அனைத்து பெண்களையும் கவர்ந்துள்ள நிலையில், அன்றாடம் குடும்ப பெண்கள் சந்திக்கும் பிரச்சினையை வெளியே எடுத்துக் காட்டி வருகின்றது.
இதில் பாக்கியாவிற்கு கணவராக நடிக்கும் கோபி ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்து வந்த நிலையில், சமீபத்தில் சீரியலிலிருந்து விலகுவதாக அறிவித்து பின்பு சீரியலில் தொடர்ந்து நடித்து வருகின்றார்.
ராதிகாவின் மீது கோபத்தில் கோபி
கோபியின் அம்மா ராதிகாவை விவாகரத்து செய்ய கோபியிடம் கூறிய நிலையில், ராதிகாவிற்கு சற்று பயம் ஏற்பட்டுவிட்டது.
இதனால் ராதிகாவின் தாய் மயூரியை கொண்டு வந்து கோபி வீட்டில் விட்டுள்ளார். இதனால் கொந்தளித்த கோபி இதுவரை இல்லாத அளவிற்கு ராதிகாவிடம் கோபமாக பேசியுள்ளார்.
கோபியின் இந்த மாற்றத்தினைக் கண்ட ரசிகர்கள் சற்று மகிழ்ச்சியுடன் இருப்பதுடன், கதையின் போக்கு வித்தியாசமாக இருப்பதால் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்புடனும் காணப்படுகின்றனர்.