கோபியை கன்னத்தில் பளார் என விட்ட ராதிகா! பரபரப்பான பரிதாப காட்சி
பாக்கியலட்சுமி சீரியலில் கோபி, ராதிகாவை திருமணம் செய்த பின்பு படும் அவஸ்தைக்கு மத்தியில் தாத்தாவாகியதால் பெறும் வேதனைக்கு உள்ளாகியுள்ளார்.
பாக்கியலட்சுமி சீரியல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றது. இந்த சீரியலில் மனைவிக்கு தெரியாமல் தனது காதலியுடன் கணவர் தொடர்பு வைத்த நிலையில், இறுதியில் அவரை இரண்டாவது திருமணம் செய்து கொள்கின்றார்.
இந்நிலையில் ராதிகாவின் வீட்டில் சாப்பாட்டுக்கு மிகவும் சிரமப்படும் கோபியின் நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே செல்கின்றது.
தற்போது கோபி தாத்தாவாகியதால், கோபியின் அப்பா, அவரது வீட்டிற்கு வந்து அமர்களம் செய்துவிட்டு சென்றுள்ளார். இதனால் கோபி ராதிகா இடையே சண்டை ஏற்படுகின்றது.
இதில் ராதிகா பொம்மையைக் கொண்டு கோபியின் கன்னத்தில் பளார் என எறிந்து தனது கோபத்தை காட்டியுள்ளார். கோபியோ என்ன செய்வது என்று தெரியாமல் பரிதவித்து நிற்கின்றார்.