பாக்யாவை பெண் பார்க்க கிளம்பும் பழனிச்சாமி அம்மா.. வயித்தெரிச்சலில் கொதிக்கும் கோபி - விறுவிறுப்பான தருணங்கள்!
கோபி செய்த சில தவறான விடயங்களால் பழனிச்சாமியின் அம்மா பாக்யாவை பழனிக்கு திருமணம் செய்து வைக்க திட்டமிட்டுள்ளார்.
பாக்கியலட்சுமி
சினிமாவை விட மக்கள் அதிகம் விரும்பி பார்ப்பது சின்னத்திரையாக மாறியுள்ளது.
இதனை தொடர்ந்து பிரபல தொலைக்காட்சிகளில் நாளுக்கு நாள் புதிய புதிய சீரியல்கள் உருவாக்கம் பெற்று வருகின்றது.
அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் பாக்கியலட்சுமி சீரியல் முதல் இடத்தில் ஓடிக் கொண்டிருக்கின்றது.
இதில் பாக்கியா, கோபி, ராதிகா, செழியன் உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார்கள்.
பாக்கியாவிற்கு இரண்டாவது திருமணமா?
இந்த நிலையில், பாக்யாவை அசிங்கப்படுத்தும் வகையில் பழனிச்சாமியின் அம்மாவிடம் சென்று இவர்களின் உறவு பற்றி தவறாக கோபி பேசி வைக்கிறார்.
இதனை தன்பக்கம் சாதகமாக வைத்து கொண்டு பாக்கியாவை பழனிக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க முடி செய்கிறார். இந்த விடயத்தை கோபியிடமும் கூறுகிறார்.
இதனால் கடுப்பான கோபி பழனியின் அம்மாவை திட்டியப்படி வெளியில் செல்ல வரும் போது பழனியிடம் சிக்கிக் கொள்கிறார். பழனியை பார்த்த கோபி மூச்சு பேச்சு இல்லாமல் இருக்கிறார்.
கோபியை முரைத்தப்படி பழனியும் வீட்டிற்குள் நுழைகிறார். இனி பாக்கியலட்சுமி சீரியல் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |