பழனிச்சாமிக்கு மனைவியாவாரா பாக்கியா? எதிர்பாராத திருப்பத்தில் பாக்கியலட்சுமி சீரியல்
பாக்கியாவை பழனிச்சாமிக்கு திருமணம் செய்வதற்கு அவரது தாய் பேசியுள்ள புதிய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னனியில் இருந்து வருகின்றது.
பாக்யாவை வேண்டாம் என்று அவரை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து ஒரே வீட்டில் வசித்து வந்த கோபி பாக்கியாவின் சாவாலில் தோல்வியடைந்து வீட்டை விட்டு வெளியேறினார்
இனியா சேர்ந்த கல்லூரியில் பாக்கியாவும் கல்லூரியில் சேர்ந்துள்ளதுடன், தனது மாமியாரிடமும் சம்மதம் பெற்றுள்ளார். இந்நிலையில் பழனிச்சாமியின் அம்மா அவருக்கு திருமண பேச்சை பேசி வருகின்றார்.
அதில் பாக்கியாவிற்கு உன்னை பிடித்தால் அவரது வீட்டிற்கு சென்று திருமணம் குறித்து பேசிவருவோம் என்று பழனிச்சாமியிடம் அவரது அம்மா கூறியுள்ளார்.
இதற்கு மறுத்த பழனிச்சாமி நாங்கள் நல்ல நண்பர்கள் இதுகுறித்து எந்தவொரு பேச்சும் அவர்கள் வீட்டில் பேச வேண்டாம் என்று கூறி வருகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |