பழனிச்சாமி முன்பு பாக்கியாவை வறுத்தெடுக்கும் கோபி..பாக்கியலட்சுமியின் புதிய ஆட்டம் ஆரம்பம்!
பழனிச்சாமியின் முன்பு பாக்கியாவை கோபி வறுத்தெடுத்து வருகிறார்.
பாக்கியலட்சுமி
சினிமாவை விட மக்கள் அதிகம் விரும்பி பார்ப்பது சின்னத்திரையாக மாறியுள்ளது.
இதனை தொடர்ந்து பிரபல தொலைக்காட்சிகளில் நாளுக்கு நாள் புதிய புதிய சீரியல்கள் உருவாக்கம் பெற்று வருகின்றது.
அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் பாக்கியலட்சுமி சீரியல் முதல் இடத்தில் ஓடிக் கொண்டிருக்கின்றது.
இதில் பாக்கியா, கோபி, ராதிகா, செழியன் உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார்கள்.
பழிவாங்கும் கோபி
இந்த நிலையில் பாக்கியா படிக்கும் ஆங்கில வகுப்பிற்குள் கோபியும் ஒரு மாணவராக சேர்கிறார்.
கோபி வகுப்பிற்குள் நுழையும் போது பழனிச்சாமியும் பாக்கியாவும் ஜோடியாக சிரித்து கொண்டு வருகிறார்கள்.
அப்போது, வீட்டில் பத்தினி போல் நடித்து விட்டு இங்கு ஒரே கும்மாளமாக இருக்கின்றது என கோபமாக பேசுகிறார்.
இதனை தொடர்ந்து பாக்கியாவை தனியாக்குவதற்கான வேலைகளை கோபி செய்து வருவது போன்று தெரிகிறது.
இனி பாக்கியலட்சுமி விறுவிறுப்பாக செல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றார்கள்.