பாக்கியாவின் சோகம் பழனிச்சாமிக்கு காதலாக மாறுமா? எதிர்பாராத டுவிஸ்ட்
பாக்கியா பழனிச்சாமியிடம் தனது சோகத்தினை கண்கலங்கியவாறு கூறியுள்ள நிலையில், பழனிச்சாமிக்கு காதல் ஏற்படுமா என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்துள்ளது.
பாக்கியா மற்றும் கோபி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னணியில் இருந்து வருகின்றது.
பாக்யாவை வேண்டாம் என்று அவரை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து ஒரே வீட்டில் வசித்து வருகின்றார். இதில் ராதிகாவிற்கும் கோபியின் அம்மாவிற்கும் இடையே நடக்கும் சண்டை தற்போது ரசிகர்களிடையே சுவாரசியத்தை அதிகரித்து வருகின்றது.
ராதிகா, கோபி வீட்டில் அனைவரையும் கடுப்பேற்றி வரும் நிலையில், கோபிக்கு பழனிச்சாமி மீது பொறாமையாகவும் இருந்து வருகின்றது. ஒரு கட்டத்தில் பழனிச்சாமி வீட்டிற்கே சென்று அவரிடம் சண்டையிட்டு வந்தார்.
இதனை அறிந்த பாக்கியா கோபியை கடுமையாக திட்டினார். தற்போது பழனிச்சாமி கோபி குறித்து பாக்கியாவிடம் பேசியுள்ளார். இதில் பாக்கியா கோபியுடன் வாழ்ந்த போது அனுபவித்த கஷ்டத்தினை கூறி கண்கலங்கியுள்ளார்.
பழனிச்சாமியின் இரக்கமான பார்வை பாக்கியா மீது காதலில் விழ வைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |