இடியை இறக்கிய ஜெனி குடும்பம்... ஆடிப்போன செழியன்
பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் குடும்பத்திற்கு தெரியாமல் ஜெனியின் குடும்பம் குழந்தைக்கு பெயர் வைக்கும் நிகழ்ச்சியினை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளனர்.
பாக்கியலட்சுமி சீரியல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னணியில் இருந்து வருகின்றது.
பாக்யாவை வேண்டாம் என்று விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து தனியாக இருந்து வந்த நிலையில் தற்போது பாக்கியாவின் வீட்டிற்கே வந்துள்ளார்.
ராதிகா பாக்கியாவிற்கு ஆறுதலாக இருந்து வருகின்றார். ஆனாலும் பாக்கியா அடுத்தடுத்து பிரச்சினையை சந்தித்து வரும் நிலையில், தனது தொழிலில் அடுத்தடுத்த இடத்திற்கு சென்றுள்ளார்.
தற்போது பாக்கியாவிற்கு புதிய ஆர்டர் ஒன்றும் கிடைத்துள்ளது. செழியன் குடும்ப பிரச்சினை விவாகரத்து வரை சென்று நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் ஜெனி வீட்டில் பாக்கியா குடும்பத்திற்கு தெரியாமல் குழந்தைக்கு பெயர் வைக்கும் நிகழ்ச்சியினை நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.