Baakiyalakshmi: சிறையில் இருக்கும் செழியன்... மீட்க போராடும் பாக்கியா
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவின் ஹோட்டலுக்கு வந்த கவுன்சிலரிடம் செழியன் சண்டையிட்ட நிலையில், தற்போது சிறையில் இருக்கின்றார்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ள இந்த சீரியலை ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண் கணவர் இல்லாமல் தனது கடமைகளை செய்து பிள்ளைகளை வளர்க்கும் கதையாக சென்றது.
எதுவும் அறியாத பெண்ணாக இருந்த பாக்கியா தற்போது ஹோட்டல் தொழிலில் கொடிகட்டி பறந்து வந்த நிலையில், இவருக்கு இடையூறாக சுதாகர் களமிறங்கி ஹோட்டலை அபகரித்துள்ளார்.
பாக்கியா மீண்டும் புதிய ஹோட்டலை ஆரம்பித்துள்ள நிலையில், அங்கு கவுன்சிலர் பிரச்சனை செய்து வருகின்றார். கடைசியில் செழியன் கவுன்சிலரை அடித்துள்ளார்.
இதனால் போலிசார் செழியனை கைது செய்து சென்றுள்ளனர். இந்த பிரச்சனையிலிருந்தும் பாக்கியா செழியனை மீட்பதற்கு கவுன்சிலரை பார்க்க வந்துள்ளார்.
ஆனால் கவுன்சிலர் சமாதானம் ஆகாத நிலையில், பாக்கியா ஏமாற்றத்துடன் வெளியே வருகின்றார். மற்றொரு அரசியல் தலைவரை சந்தித்து செழியன் பிரச்சனையிலிருந்து மீட்க முடிவு எடுத்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |